ஜவ்வரிசி ரொட்டி

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

ஜவ்வரிசி ரொட்டி

Post by cm nair » Fri Oct 18, 2013 10:05 am

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி - 1 கப்
உருளைக்கிழங்கு - 3
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 1
வேர்க்கடலை - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
கோதுமை மாவு - 1/4 கப்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

• உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்துகொள்ளவும்.

• கொத்தமல்லி,ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• வேர்க்கடலையை வறுத்து ஒன்றும் பாதியாக பொடித்துக் கொள்ளவும்.

• முதலில் ஜவ்வரிசியை 1/2 கப் நீரில், 6-8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

• பின் ஊற வைத்த ஜவ்வரிசியில், எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.

• பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும்.

• பின்பு அந்த மாவை உருண்டைகளாக பிடித்து, ஒவ்வொரு உருண்டையையும் பிளாஸ்டிக் ஷீட்டில் வைத்து வட்டமாக தட்டி, தோசைக்கல் சூடானதும், கல்லில் எண்ணெய் தடவி, தட்டி வைத்துள்ளதை போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.

• இதேப் போன்று அனைத்து மாவையும் ரொட்டிகளாக சுட்டு எடுக்க வேண்டும்.

• இப்போது சுவையான ஜவ்வரிசி ரொட்டி ரெடி!!!
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”