சுரைக்காய் சப்பாத்தி

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

சுரைக்காய் சப்பாத்தி

Post by cm nair » Wed Oct 16, 2013 12:06 pm

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப்,
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - அரை டீஸ்பூன்.

பூரணத்துக்கு:

சுரைக்காய் - 1
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சைபழ சாறு - ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
மல்லித்தழை - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,
சீரகம் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

• சுரைக்காயை துருவிக் கொள்ளவும்.

• ப.மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

• கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• எண்ணெயைக் காயவைத்து சீரகம் தாளித்து, துருவிய சுரைக்காய், பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்குங்கள்.

• அதனுடன் உப்பு, எலுமிச்சைபழச் சாறு, மல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

• கோதுமை மாவை நெய், உப்பு சேர்த்து பிசைந்து, கிண்ணங்களாக செய்து, உள்ளே பூரணம் வைத்து மூடி சப்பாத்திகளாக திரட்டுங்கள்.

• தோசைக்கல்லைக் காயவைத்து, சப்பாத்திகளை போட்டு வேக வைத்தெடுங்கள்.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”