இடியாப்பம்

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

இடியாப்பம்

Post by mubee » Tue Oct 15, 2013 11:06 am

தேவையான பொருட்கள்

*புழுங்கல் அரிசி - 3 கப்
*பச்சரிசி - ஒரு கைப்பிடி
*நல்லெண்ணெய் - மூன்று டேபிள் ஸ்பூன்
*உப்பு - 2 1/2 டீஸ்பூன்

செய்முறை

1. அரிசியை ஐந்து மணி நேரம் ஊற வைத்து நன்கு கழுவி உப்பு சேர்த்து அரைக்கவும். மிகவும் நைசாகவும் இருக்கக் கூடாது. மிகவும் கொர கொரப்பாகவும் இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு அரைத்து வழிக்கவும்.
2. அடுப்பில் ஒரு கடாயை (நான் ஸ்டிக்காக இருந்தால் மிகவும் உகந்தது) வைத்து நல்லெண்ணய் ஊற்றி சூடானதும் மாவை ஊற்றி கிண்டவும்.
3. கெட்டியானதும் இறக்கவும்.
4. இட்லி பானையை வைத்து தட்டில் மாவை இடியாப்ப நாழியில் போட்டு பிழியவும்.
5. ஐந்து நிமிடத்தில் எடுத்து சூடாகவே தட்டில் கவிழ்க்கவும்.
6. தேங்காய் பாலுடன் பரிமாறவும்.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”