காரட்- தக்காளி சூப்

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

காரட்- தக்காளி சூப்

Post by mubee » Tue Oct 15, 2013 11:03 am

தேவையான பொருட்கள்:
காரட் - 500 கிராம்
தக்காளிப் பழம் - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 1
வெண்ணைய் - 50 கிராம்
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
சர்க்கரை - 1 தேக்கரண்டி
மைதமாவு - 2 தேக்கரண்டி
தண்ணீர் - 2 கோப்பை


செய்யும் முறை:


1. தக்காளிப்பழத்தைக் கொதிக்கும் தண்ணீரில் 5 நிமிடம் வரை போடவும். பின், தோலுரித்துப் பொடிபொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


2. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காரட்டை வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும்.


3. வாணலியில் வெண்ணையைப் போட்டு, நறுக்கிய வெங்காயத்தை இரண்டு நிமிடங்கள் வரை வெதக்கவும்.


4. பிறகு காரட் வில்லைகளைப் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கவும். மைதாமாவைச் சேர்க்கவும்.


5. நறுக்கிய தக்காளித் துண்டுகள், மிளகுப்பொடி, உப்பு, சர்க்கரை, தண்ணீர் முதலியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.


6. சூப் வடிக்கட்டியின் மூலம் வெந்த காய்களை வடிக்கட்டவும்.

7. தேவையானால், மேலே 1 தேக்கரண்டி க்ரீம் [ Cream ] ஊற்றிப் பரிமாறவும்.

8. சூப்பைச் சூடாகப் பரிமாறவும்.
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

Re: தக்காளி சூப்

Post by mubee » Tue Oct 15, 2013 11:04 am

தேவையான பொருட்கள்:

தக்காளி - 1/2 கிலோ
சிறிய பீட்ரூட் - 1
காரட் - 1
பெரிய வெங்காயம் - 1
இஞ்சித் துண்டு -1
புதினா இலை ஒரு கைப்பிடி அளவு
செலரித் தண்டு [Celery] - 2
பூண்டு - 2 அல்லது 3 பல்
வெண்ணைய் - 30 கிராம்
மைதாமாவு - 1 மேஜைக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
ரொட்டித்தூண்டு - 3 [Bread Slices]

செலரித் தண்டு கிடைக்காவிட்டால் 4, 5 துளசி இலையை உபயோகிக்கலாம்.


செய்யும் முறை:

1. தக்காளிப்பழம், பீற்ரூட், காரட், வெங்காயம், இஞ்சி, செலரித் தண்டு [Celery] எல்லாவற்றையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

2. ஒரு பாத்திரத்தில் வெண்ணையை உருக வைத்துக் கொள்ளவும்.

3. வெண்ணைய் உருகியவுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி மூன்றையும் 2 அல்லது 3 நிமிடம் வரை வதக்கவும்.

4. பிறகு, நறுக்கிய காரட், பீட்ரூட், செலரி தண்டு, புதினா முதலியவற்றைப் போட்டு 2 நிமிடம் வரை வதக்கவும். பிறகு மைதாமாவையும் சேர்த்துக் கலக்கவும்.

5. நறுக்கிய தக்களிப் பழத்தைப் போட்டு, 3 கோப்பைத் தண்ணீர் விட்டு, உப்பு, மிளகுத்தூள், சர்க்கரை முதலியவற்றைப் போட்டு, பிரஷர் குக்கரில் வேக வைக்கவும். குக்கர் இல்லாவிட்டால், சாதாரணமான பாத்திரத்தில் வேகவைதுக் கொள்ளலாம்.

6. நங்கு வெந்தபின், சூப் வடிகட்டியின் [Soup Strainer] மூலமாகவோ, அல்லது வலை வடிகட்டி மூலமாகவோ வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

7. ரொட்டியை [ Bread] சிறு சதுரத் துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து வைத்துக் கொண்டு சூப் பரிமாறும் சமயம் போட்டுக் கொடுக்கவும்.

8. சூப்பை எப்போதும் சூடாகப் பரிமாறவும்.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”