கொண்டை கடலை சாலட்

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

கொண்டை கடலை சாலட்

Post by mubee » Mon Oct 14, 2013 2:09 pm

தேவையான பொருட்கள்

வெள்ளை கொண்டை கடலை - 1/4 கிலோ
கேரட் - 4 மேஜைக்கரண்டி [துருவியது]
வெங்காயம் - 3 [நீள வாக்கில் அரிந்தது]
தக்காளி - 3 [வட்ட வடிமாக அரிந்து நான்காக வெட்டிக் கொள்ளவும்]
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
வெள்ளரிக்காய் - 1 பொடியாக அரிந்து சேர்க்கவும்
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்து மல்லி தழை - இரண்டு மேசை கரண்டி[பைனாக சாப்[chop]செய்தது]
எண்னை - 1 தேக்கரண்டி
சாட் மசாலா [ Chaat Masala] - 1 தேக்கரண்டி


செய்யும் முறை


1. கொண்டை கடலையை எட்டு மணி நேரம் ஊறவைத்து ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து குக்கரில் குழையாமல் வெந்து எடுக்க வேண்டும்.


2. பிறகு ஒரு வானலியில் எண்ணை விட்டு வெங்காயத்தை லேசாக இரண்டு வதக்கு வதக்கி கொண்டை கடலை,உப்பு ஒரு தேக்கரண்டி, மிளகு தூள்,லெமென் ஜூஸ் கலக்கி இரக்கி விடவேன்டும்.


3. இப்போது கேரட்,வெள்ளரி,கொத்துமல்லி தழை,தக்காளி சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.


4. பிறகு, சாட் மசாலா [Chaat Masala] தூவி பரிமாறவும்.
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

Re: ஃப்ரூட்ஸ்- நட்ஸ் சாலட்

Post by mubee » Mon Oct 14, 2013 2:11 pm

தேவையானப் பொருட்கள்


பிடித்தமான பழ வகைகள் - 1 கிலோ
சர்க்கரை - 8 தேக்கரண்டி
பால் - 1 லிட்டர்
கஸ்டர்ட் பவுடர் [வெனிலா ஃப்ளேவர்] - 4 தேக்கரண்டி
முந்திரி - 10
பாதாம் - 10
பிஸ்தா - 1 கைப்பிடி
கிஸ்மிஸ் - 2 மேஜைக்கரண்டி
ஜாம் அல்லது ஜெல்லி - சிறிய கப்
மில்க் மெய்ட் - 1/4 கப்
ஆப்பிள், ஆரஞ்ச், பேரிக்காய், கொய்யா பழம், பிளம்ஸ், சாத்துக்குடி, வாழைப்பழம், மாதுளம்பழம் இது போன்ற விருப்பமான எல்லா பழவகைகளும் சேர்த்து 1 கிலோ அளவு எடுத்துக் கொள்ளவும்.

செய்யும் முறை


1. குறிப்பிட்டுள்ள மற்ற அனைத்து தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

2. எல்லா பழவகைகளையும் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

3. ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி நன்கு காய்ச்சிக் கொள்ளவும்.

4. 1 லிட்டர் பாலுக்கு 4 தேக்கரண்டி கஸ்டர்ட் பவுடர் விதம் எடுத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் கஸ்டர்ட் பவுடரை போட்டு 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

5. பாலுடன் சர்க்கரை சேர்த்து கலந்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் கரைத்து வைத்திருக்கும் கஸ்டர்ட் பவுடரை ஊற்றி கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். தாமதித்தால் கட்டி விழுந்துவிடும். பால் கெட்டியான பதமானதும் இறக்கி வைக்கவும்.

6. பரிமாற போகும் கிண்ணத்தில் நறுக்கின பழக்கலவையை வைக்கவும். அதன் மேல் முந்திரி, பாதாம், கிஸ்மிஸ் மற்றும் பிஸ்தாக்களை தூவவும்.

7. நட்ஸ் தூவிய பின்னர் மில்க் மெயிட் மற்றும் கஸ்டர்ட் கலவையை பரவலாக ஊற்றவும். அதன் மேல் ஜாம் அல்லது ஜெல்லியை வைத்து அலங்கரிக்கவும். ப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று ஆனதும் எடுத்து பரிமாறவும்.

8. சுவையான ப்ரூட்ஸ், நட்ஸ் சாலட் தயார்.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”