பூந்தி லட்டு

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

பூந்தி லட்டு

Post by cm nair » Fri Oct 11, 2013 9:26 am

தேவையானப் பொருள்கள்:

கடலை மாவு – 2 கோப்பை,
சர்க்கரை – 3 கோப்பை,
நெய் – கால் கோப்பை,
முந்திரி(உடைத்தது) – கால் கோப்பை,
திராட்சை – கால் கோப்பை,
தண்ணீர்- 2 கோப்பை,
ஏலப்பொடி – அரைத் தேக்கரண்டி,
லட்டு கலர் – 2 சிட்டிக்கை.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் இரண்டு கோப்பை அளவு கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடலை மாவுடன் நீரை ஊற்றி அதில் கலர் பொடியை சேர்த்து நன்கு கரைக்க வேண்டும்.
கரைத்த மாவின் பதம் தோசை மாவின் பதம் போன்று இருக்க வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
எண்ணெய் நன்கு காய்ந்ததும் கரைத்து வைத்த மாவை லட்டுக் கரண்டி அல்லது சல்லடைக் கரண்டியால் எடுத்து நன்கு காய்ந்த எண்ணெயில் ஊற்ற வேண்டும்.
பூந்தி நன்கு முத்து முத்தாக விழ வேண்டும்.அடுப்பின் அனலை மிதமாக எரிய விட வேண்டும்.
பூந்தி நன்கு வெந்ததும் தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அனைத்து மாவையும் வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மற்றும் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை பாகுவை அதாவது சர்க்கரையுடன் நீ்ரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
கொதித்ததும் மிதமான சூட்டில் பத்து நிமிடம் சர்க்கரை பாகுவை வைக்க வேண்டும்.
இதில் தனியே எடுத்து வைத்துள்ள பூந்தி, ஏலப்பொடி மற்றும் நெய்யில் வறுத்துள்ள முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
கைகளில் சிறிது நெய்யைத் தடவிக்கொண்டு கைப் பொறுக்கும் சூட்டில் சிறு சிறு உருண்டையாகப் பிடிக்க வேண்டும்.
இப்போது அனைவரும் விழாக்காலங்களில் விரும்பி உண்ணும் லட்டு தயார்.

குறிப்பு:

லட்டு பிடிக்க சரியாக வராவிட்டால் அதனுடன் சிறிது சூடான நீர் சேர்த்து லட்டு உருண்டை பிடிக்கலாம்.

மருத்துவக் குணங்கள்:

கடலை மாவை இரவில் முகத்தில் தேய்த்து விட்டு தூங்கினால் பகலில் சருமம் பள பளவென்று இருக்கும்.
மேலும் முகத்தில் உள்ள பரு, சரும வறட்சி, அதிகப்படியான எண்ணெய் பசை, சருமத்தில் இருக்கும் கருப்புப் புள்ளிகள் மற்றும் பொலிவிழந்த கூந்தல் போன்றவற்றை இவைக் குணப்படுத்த வல்லது.
இவற்றை முகத்தில் தேய்ப்பதால் சருமம் மென்மையாகத் தோன்றும்.
மேலும் இளமைப் போன்றுக் காட்சியளிக்கும்.
இத்தகைய நன்மை நிறைந்த பொருள் பூந்தி லட்டில் இருப்பதால் நாம் இவற்றை ருசித்து சாப்பிடலாம்.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”