Page 1 of 1

விவசாயி நலனுக்கு தக்காளி திருவிழா

Posted: Mon Nov 28, 2016 10:10 am
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=Ly4qeCmjQe4[/youtube]

மக்கள் தேவையைக்காட்டிலும் உற்பத்தி அதிகம் ஆகும் பொழுது, அப்பொருளின் விலை தானாக குறைந்துவிடும் என்பது இயல்பு. ஆனால் அப்பொருளை உற்பத்தி செய்ய விவசாயி பட்டக் கஷ்டத்தினை மனதில் கொண்டு, உற்பத்திக்கு ஏற்ப தேவையினையும் நாம் அதிகரித்தல் முடியும்.

அவ்வப்பொழுது மக்களை செலவு செய்ய வைக்க பல திருவிழாக்கள் இருப்பது போல, தக்காளி உற்பத்தி அதிகமாக இருக்கும் காலக்கட்டத்தில் கொண்டாடும் விதமாக தக்காளி திருவிழா நமது தமிழ் நாட்டிலும் கண்டிப்பாக கொண்டாடப்பட வேண்டும். இதன் மூலம் தேவையும் அதிகரிப்பதால், விலை வீழ்ச்சி தடுக்கப்பட்டு, விவசாயி நலன் காக்கப்படும்.