மட்டன் பிரியாணி

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
jayapriya
Posts: 29
Joined: Fri Sep 20, 2013 4:48 pm
Cash on hand: Locked

மட்டன் பிரியாணி

Post by jayapriya » Sat Apr 30, 2016 5:28 pm

அன்பான படுகை நண்பர்களுக்கு வணக்கம்

என்னதான் நாம் வாரம் முழுவதும் வேலை. வேலை என அலைந்தாலும் அந்த ஞாயிற்றுக்கிழமையில் நன்றாக துாங்கி எழுந்து மதிய நேரம் விரும்பிய அசைவம் சமைத்து உண்ண நினைப்போம். நாளை தம் போட்ட மட்டன் பிரியாணி (மசாலாப் பொடிகள் தவிர்த்தது) செய்யலாம் என்று இருக்கிறேன். அதன் குறிப்பை உங்களுக்கும் கொடுக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் செய்துபாருங்களேன்.

(பகிர்ந்துண்டால் பசியாறும் என்பார்கள், தங்களது குடும்பம் அளவான குடும்பம் எனில் தொிந்தவர்களுக்கும் கொடுக்கும் வண்ணம் அளவை கூறியுள்ளேன்)


தேவையான பொருட்கள்

பிாியாணி அாிசி 1 கிலோ
மட்டன் 1 கிலோ
பொிய வெங்காயம் 250 கிராம் (அ) உங்கள் தேவைக்கு
நெய் 100 கிராம்
கெட்டித் தயிர் 200 கிராம்
எலுமிச்சம்பழம் 1
மிளகாய்த்துாள்
கறிவேப்பிலை
மல்லித்தழை
ஆயில்
கடுகு
உப்பு
தம் போடுவதற்கு தேவையான மரக்காி
அாி கூடை

பொடி செய்ய \
பட்டை, சோம்பு, கசகசா, கிராம்பு, ஏலக்காய் (அனைத்தும் ஒன்றாக)

அரைப்பதற்கு
இஞ்சி (தனியாக)
பூண்டு (தனியாக)
தக்காளி 250 கிராம் (தனியாக)
பச்சை மிளகாய் (7) புதினா 1 கட்டு இரண்டும் சேர்ந்து அரைக்கவும்

செய்முறை .
முதலில் அாிசியை 1/2 மணிநேரம் ஊறவைக்கவும், மட்டனை குக்காில் 1 விசில் (அ) 2 விசில் விட்டு வேகவைத்துக்கொள்ளவும், அரைக்க கொடுத்தவற்றை எல்லாம் அரைத்து வைக்கவும் (அடுப்பில் பாத்திரத்தை வைத்துக்கொண்டு அவதிபடவேண்டாம்) ஒரு அடுப்பில் பிரியாணிக்கு தேவையான தண்ணீரை வைக்கவும். மற்றொரு அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து எண்ணையை ஊற்றி கடுகு பொாிந்தவுடன் வெங்காயத்தை போட்டு பொன்னிறமானவுடன் பொடிசெய்த பட்டை கிராம்பு பொடியை போடவும் அதன்பின் இஞ்சி. பூண்டு, கலவையை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும் அதன்பின் தக்காளி கலவையை ஊற்றி நன்றாக வதங்கியபின் கெட்டித்தயிரை ஊற்றி அதனுடன் வேகவைத்த மட்டனை போட்டு மசாலாக்கள் மட்டனில் நன்கு சேரும் வண்ணம் வதக்கவும், இன்னொரு அடுப்பில் உள்ள சூடு நீரை மசாலாகலவையில் ( தண்ணீர் ஒன்றுக்கு இரண்டு என்றகணக்கில்) ஊற்றி கொதிக்கவிடவும், பிறகு ஊறவைத்துள்ள அரிசியில் இருக்கும் நீரை சுத்தமாக அரிகூடையில் வடித்துவிட்டு (அரி கூடை இல்லாதவர்கள் காய் வடிக்கும் பாத்திரத்தில் தண்ணீரை வடித்தெடுக்கவும்) அாிசியை கொதிக்கும் மசாலா கலவையில் போட்டு தேவையான உப்பு, மிளகாய்த்துாள் சோ்த்து உப்பு காரம் சரிபாா்த்து கிளறிவிட்டு பாத்திரத்தை ஒரு தட்டம் போட்டு சிறிது நேரம் மூடி வைக்கவும். அாிசி அரைப்பதம் வேகும்வரை மிதமான தீயில் அடிப்பிடிக்காமல் பாத்திரத்தின் மூடியை அவ்வப்போது திறந்து அாிசியை கிளறிவிடவும். (இவற்றிற்கிடையே தம் போடுவதற்கு தேவையான தணலை மூட்டவும்) அரிசி அரைப்பதம் வெந்துவிட்டதா? என்றுப் பாா்க்கவும் தண்ணீா் போதவில்லை என்றால் அடுப்பில் இருக்கும் கொதிநீரை எடுத்து ஊற்றிக் அரிசி அரைப்பதம் வெந்தவுடன் பாத்திரத்தை கீழே இறக்கிவைத்து பாதிநெய், எலுமிச்சம்பழம் மற்றும் பாதி கொத்தமல்லி தழையை துாவி பாத்திரத்தின் மேல் ஒரு தட்டத்தை வைத்து அதன் மேல் தணலை பரப்பிவிடவும். ஒரு பதினைந்து நிமிடம் கழித்து தட்டத்தை திறந்து சிறிது கிளறிவிட்டு மீதமிருக்கும் நெய், மல்லித் தழையை துாவி விட்டு மீண்டும் தணல்போட்ட மூடியை மூடிவைக்கவும் 10 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் கம கம மட்டன் பிரியாணி ரெடி.

சமைத்துப் பார்த்துவிட்டு சொல்லுங்கள் இதற்கு இணையாக மசாலா பவுடா் கலக்காத சிக்கன் கிரேவி குறிப்பையும் தருகிறேன்.

(நான் சொன்ன குறிப்பினை வைத்து சாியாக செய்தால் நாமும் ஒரு Biriyani Hut தொடங்கலாமே எனும் அளவிற்கு மிகவும் சுவையாக இருக்கும். விறகு மூட்டி பிாியாணி செய்தால் இன்னும் இரண்டு மடங்கு சுவையாக இருக்கும்)
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”