Page 1 of 1

மணக்க மணக்க ஒரு கருவாட்டுத் தொக்கு

Posted: Mon Aug 10, 2015 3:21 pm
by kavinayagam
தென்தமிழக அக்களுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்குமே இந்த கருவாட்டுத்தொக்கு மிகவும் பிடிக்கும்.இதற்கு ஐந்து நிமிடங்கள் போதும்.இதை செய்து பார்த்து ருசித்து சாப்பிடுங்கள்.சரி பேசிக்கிட்டே இருக்காம விபரத்தை சொல்லட்டுமா.
முதலில் தேவைக்கான பொருட்க்கள்.
1. மனக்கும் சீலா மீன் கருவாடு-25 கிராம்
2.சின்ன வெங்காயம்-50 கிராம்
3.நாட்டுத்தக்காளி-100 கிராம்
4.மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி
5.மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
6.ஆயில்-3 தேக்கரண்டி
7.கடுகு-தேவைக்கேற்ப
8.கரிவேப்பிலை-சிறிது
9.உப்பு -தேவைக்கேற்ப
செய்முறை;
முதலில் வெம்காயத்தையும், தக்காளியையும் சிறிது சிறிதாக தனி தனியாக அரிந்து வைத்துக்கொள்ளவும்.கருவாட்டு துண்டுகளை நன்கு சுத்தம் செய்து தனியாக வைத்து கொள்ளவும்.
நான் கொடுக்கும் டிப்ஸை மிதமான தீயில் தயார் செய்ய வேண்டும்.
1.அடுப்பைப்பற்ற வைத்து வானலியில் ஆயில் விட்டு சூடாக்கவும்.
2.ஆயில் சூடானதும் கடுகை போடவும்.
3.கடுகு வெடித்த பின் கருவேப்பிலை போடவும்
4.பின் வெங்காயயத்தை போட்டு நன்றாக சிவக்கும் வரை வத்க்கவும். கருகிவிட கூடாது.
5.அதன் பின் தக்காளியைப்போட்டு வத்க்கவும்.
6.தக்காளி வைதங்கிய பின்பு மஞ்சள் தூள்,மிளகாய்தூள்,உப்பு போட்டு மசாலா வாடை
போகும் வரை சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
7.பின் கருவாட்டுத்துண்டுகளைப்போட்டு ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும்.

சூடான கருவாட்டுத்தொக்கு ரெடி.பசிக்குது என்ன சாப்பிடலாமா.நீங்களும்
வரீங்களா.தனியா சாப்பிட்டா வயிறு வலிக்கும்.ஏன்னா ருசி எப்பிடி இருக்கும்னு
தெரிஞ்சுக்கிட்டீங்க் இல்லயா.சமயலைப்பார்த்து கண்ணு வச்சுட போறீங்க சுத்திபோடணும்.