15வது பயிற்சி பணி : ”அறுசுவை கொண்ட சமையல் அறை” புதிய பெண்கள் பக்கம்.

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

15வது பயிற்சி பணி : ”அறுசுவை கொண்ட சமையல் அறை” புதிய பெண்கள் பக்கம்.

Post by ஆதித்தன் » Mon Mar 12, 2012 8:37 am

சமையல் கலை

ஆயக்கலைகள் அறுபத்திநாலு என்றார், அதில் சமையல் கலையும் உண்டு என்பார். நமக்கு அறுபத்திநான்கில் எத்தனை தெரியும் என்று கூட தெரியவில்லை என்றாலும், தினமும் வயிறு முட்ட சாப்பிட வேண்டும். அதிலும் அம்மா சமையல் என்றால் சூப்பர்.

நாம் பணம் பணம்னு சுத்துறோம்னா, அதற்கு முதல் காரணம் ஜான் வயிற்றுக்காகத்தான் என்றால் மிகையாகாது. ஆனால், இன்று பசி என்ற சொல் மாறி ஆசை என்ற சொல்லுக்குப் பின்னால் மனிதன் ஒட ஆரம்பிச்சுட்டான். இருந்தாலும் ”நாள் முழுக்க கஷ்டப்படுறது எதற்கு, இந்த ஜான் வயிற்றுக்குத்தானே” என்ற பழமொழி எல்லாம் இன்றைய காலத்திற்கு எடுபடாமல் போயிட்டுன்னு நினைக்காதீங்க. என்னதான் ஆசை ஆசைனு ஒடினாலும், அங்கும் துரத்துவது பசி.

வாய்க்கு ருசியா சாப்பிடனும்னு ஆசை இருக்கும், ஆனால் சமைக்கத் தெரியாது. ஆண்கள் தான் இப்படின்னா. ருசிக்க ருசிக்க சமைத்துப்போடுவது பெண்கள், அங்கும் சிலருக்கு சமைக்க கூடத் தெரியாது. ( அம்மா மார்கள் விதிவிலக்கு).
அன்று : ஒட்டல் பக்கம் போய் சாப்பிடுவதே அரிது.
இன்று : ஒட்டல்ல ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகிறார்கள்.
என்னதான் ஒட்டலில் நினைத்தவை சாப்பிடக் கிடைத்தாலும், வீட்டில் செய்து சாப்பிட்டால்தான் உடலுக்கும் நலம், காசும் மிச்சம். சரி பாயிண்ட்டுக்கு போவோமா...

தாய்மார்களே! சமைக்கத் தெரிந்தவர்களே !
இன்று பலரிடமும் இணைய வசதி உள்ளது. அதிலும் குறிப்பாக சொல்வது என்றால் , இணையம் உபயோகப்படுத்துபவர் பலருக்கு, வாய்க்கு ருசியாக சமைக்கத் தெரியாது. அக்காமார்களே! தவறாக எண்ண வேண்டாம். இது அண்ணன்மார்களுக்கும் சேர்த்துத்தான் கேட்கிறோம். எங்கோ சென்று வேலை பார்க்கிறோம், ருசியா சமைத்து சாப்பிடலாம் என்றால் தெரியாது. ஆகவே, என்னைப் போன்ற சமைக்கத் தெரியாத ஆண்கள், மற்றும் சமைக்கத் தெரியாத பெண்களுக்காகவே இந்தப் பணி.

பலரும் இணையத்தில், காபி போடுவது எப்படி? மீன் குழம்பு ஆக்குவது எப்படி? ஈரா புட்டு எப்படி செய்யனும்? சிக்கன் 65க்கு மிளகா போடணும்மானு தேட ஆரம்பிச்சுட்டாங்க...

அப்படி தேடுபவர்கள் பெருகிவரும் காலத்தில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டாமா?
அதாங்க... நான் புதியதாக ஒரு ”நம் வீட்டுச் சமையலறை ”ன்னு பக்கத்தை உருவாக்கிட்டேன். சமையலறை இருந்தா போதுமா...
சமையல் கலையை கற்றுக் கொடுக்க ஆச்சி வேண்டாமா :edu: அதுக்காக மனோரம்மாவை கூப்பிட்டு வரச் சொல்லாதீங்க.

15வது பணி:
தமிழ் இணைய பணத்தின் 15வது பணியில், நமக்குத் தெரிந்த சமையல் முறைகளை மற்றவர்களுக்கு சொன்னால் போதும். (அல்லது) உங்களுக்கு என்ன தெரியாதுன்னு கேளுங்க / எப்படி செய்வது என்று கேளுங்கள்? அவ்ளதான்.

படுகை சமையலறையை பார்க்க :

உங்களுக்கு தெரிந்த சமையல் முறையை பதிவிட :

சமையல் குறிப்பு சந்தேகம் கேட்க :


15வது டெமொ வொர்க்ஸ் மிகவும் எளிதானது தான், ஏனெனில் உங்களுக்கு தெரிந்தவற்றை மட்டுமே செய்யப் போகிறீர்கள் அல்லது உங்களுக்கு தெரியாத சமையலை பற்றி கேட்க போகிறீர்கள். இதில் என்ன கஷ்டமா? இல்லை ஆனால் இதப்போய் யாரு செய்வா என்ற மனக்குழப்பம் இருக்கலாம். அது முற்றிலும் தவறானது. நீங்கள் செய்யாமல் தவிர்க்கும் ஒவ்வொரு பணியினாலும், நமது இணையப் பணம் என்ற பாதையின் தோல்விப் படிகளாய் மாறும். ஆகையால், கண்டிப்பாக கொடுக்கும் பணிகளை செய்யவும்.
சமையல் அறை என்பது பெண்களுக்கே உரித்தானது அல்ல. நாமும் சில நேரம், ஒரு ஆம்லெட் கூட போடத் தெரியாமல் விழித்திருக்கலாம். ஆகையால், எளிதான சமையல் கலையை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ளுங்கள் அல்லது நண்பர்கள்/தோழிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”