உருளைக்கிழங்கு புலாவ்

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
Neela
Posts: 10
Joined: Sat Dec 22, 2012 11:24 am
Cash on hand: Locked

உருளைக்கிழங்கு புலாவ்

Post by Neela » Fri Sep 12, 2014 4:05 pm

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)
பார்ஸ்லி - 2 குச்சி (பொடியாக நறுக்கியது)
புதினா - 1 குச்சி (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
பாசுமதி அரிசி - 1 1/2 கப்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கிராம்பு - 3 ஏலக்காய் - 4
பட்டை - 1
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு சேர்த்து, அரிசியைக் கழுவி போட்டு, சிறிது நேரம் கிளறி விட வேண்டும். பிறகு அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து, தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு, குக்கரை மூடி 15 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைத்து, பின் விசிலை போட்டு, 4 விசில் விட்டு இறக்க வேண்டும். பின்பு விசிலானது போனதும், குக்கரை திறந்து, அதில் நறுக்கி வைத்துள்ள பார்ஸ்லி, புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறி, 10 நிமிடம் குக்கரை மூடி வைத்து, பின் திறந்தால், சூப்பரான உருளைக்கிழங்கு புலாவ் ரெடி!!!
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”