தினை ரவை தக்காளி தோசை

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
தீபக்
Posts: 97
Joined: Fri Oct 18, 2013 12:34 pm
Cash on hand: Locked

தினை ரவை தக்காளி தோசை

Post by தீபக் » Fri Mar 28, 2014 9:16 pm

Image

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - 1 கப்
சோளம் - 1 கப்
தினை ரவை - 1 கப்
தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

• தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• தினை ரவையை வெறும் கடாயில் வறுத்து ஆற வைக்கவும்

• சோளத்தை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து அரைத்து கொள்ளவும்.

• அரைத்த சோளம், தினை ரவைவை தோசை மாவுடன் சேர்த்து உப்பு போட்டு கலந்து, 8 மணிநேரம் ஊற வைத்து புளிக்க விட வேண்டும்.

• பின்பு அதில் தக்காளி மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கலந்து, தோசைகளாக ஊற்றி எடுத்தால், சுவையான சத்தான தினை ரவை தக்காளி தோசை ரெடி!!!
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”