ரவை உப்புமா செய்யும் முறை

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
kannan77
Posts: 34
Joined: Thu Mar 06, 2014 4:00 pm
Cash on hand: Locked

ரவை உப்புமா செய்யும் முறை

Post by kannan77 » Sat Mar 22, 2014 7:12 pm

ரவை உப்புமா செய்யும் முறை.
ரவை உப்புமா செய்வதற்குத்தேவையானவை.

சின்ன ரவை .... 150 கிராம்
கடுகு .... அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு. அரை ஸ்பூன்
வற்றல் மிளகாய் ஒன்று (1)
பச்சை மிளகாய். இரண்டு (2)
இஞ்சி .... ஒரு துண்டு (1)
முந்திரிப்பருப்பு. மூன்று (3)
உப்பு. அரை ஸ்பூன்.
கருவேப்பிலை. கொஞ்சம்
நெய் :2 டீஸ்பூன்
செய்யும் முறை:

வெறும் இருப்புச்சட்டியைக் காயவைத்து அதில் ரவையைக்கொட்டி வறுத்து ஒரு தட்டில் வைத்துக்கொள்ளவும்.பிறகு அதேஇருப்புச்சட்டியில் அரைக்கரண்டி எண்ணய் விட்டுக் கடுகு, உளுத்தம் பருப்பு,துண்டு துண்டாக்கிய முந்திரிப்பருப்பு, மிளகாயை வறுத்துக்கொண்டு பிறகு இஞ்சி,பச்சை மிளகாயைப் போட்டு வறுத்தபின்பு 300 மில்லி லிட்டர் (ஒன்றரைஆளாக்கு) தண்ணீரை விட்டு அரை ஸ்பூன் உப்பையும் கருவேப்பிலையையும் போடவும்.தண்ணீர்நன்றாகக்கொதிக்கும் போது ரவையைக் கொஞ்சம் கொஞ்சமாகக்கொட்டிக்கொண்டே கிளறவும் 2 ஸ்பூன் நெய் விட்டு அடிப்பிடிக்காமல்கிளறி பக்கங்களில் ஒட்டாமல் வெந்தவுடன் இறக்கிவைக்கவும்.தேவைபட்டால் வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கி ரவை பாதி வேகும் போது சேர்த்துக்கொல்ள்ளலாம் .
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”