ஆப்பிள் கேக்.....

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
தீபக்
Posts: 97
Joined: Fri Oct 18, 2013 12:34 pm
Cash on hand: Locked

ஆப்பிள் கேக்.....

Post by தீபக் » Fri Jan 24, 2014 12:01 pm

ஆப்பிள் - 3
மைதா - 50 கிராம்
சீனி - 50 கிராம்
எண்ணெய் (அ) வெண்ணெய் - 50 கிராம்
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
முட்டை - 2
பால் - கால் கப்
பட்டைத் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை


ஆப்பிளின் தோலைச் சீவி, விதையை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

முட்டையை நன்கு அடித்துக் கலக்கி, சீனி, எண்ணெய், பால், பட்டைத் தூள் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் கலக்கவும்.
அதனுடன் மைதாவையும், பேக்கிங் பவுடரையும் சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும்.


பிறகு கேக் தட்டில் வெண்ணெய் தடவி அதில் பாதி கேக் கலவையை ஊற்றவும்.

பிறகு கேக் தட்டில் வெண்ணெய் தடவி அதில் பாதி கேக் கலவையை ஊற்றவும்.

அதன்மேல் ஆப்பிள் துண்டுகளைப் பரவலாக வைக்கவும்.

ஆப்பிள் துண்டுகளின் மேல் மீதமுள்ள கேக் கலவையை ஊற்றவும்.

180 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 20 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.

டேஸ்டி ஆப்பிள் கேக் ரெடி.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”