சமையல் குறிப்புகள் தெருஞ்சுக்க வாங்க.....

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
NRMkrishna
Posts: 34
Joined: Wed Jan 15, 2014 2:23 pm
Cash on hand: Locked

சமையல் குறிப்புகள் தெருஞ்சுக்க வாங்க.....

Post by NRMkrishna » Thu Jan 16, 2014 9:58 pm

சமையல் குறிப்புகள் :

1)முட்டையை வேக வைக்கும் போது அதனுள் இருப்பவை வெளியில் வராமல் இருப்பதற்கு, வேக வைக்கும் தண்ணீரில் ஒரு டீ‌ஸ்பூன் வினிகரை விடவும். அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது.

2)பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தி‌ல் அடி பிடிப்பதை தவிர்க்கலாம்.

3)பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயை பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.

4)தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரை‌த் தெளித்து ஃப்ரிட்ஜில் அதை வைக்கவும்.

5)எண்ணெய் கறையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைக்கவும். பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்க்கவும்.

6)காளான்களை அலுமினியம் பாத்திரங்களில் சமைக்கக்கூடாது ஏனென்றால் அவை பாத்திரத்தை கருமையாக மாற்றிவிடும்.
KEE SRI
Posts: 31
Joined: Wed Jan 01, 2014 3:48 pm
Cash on hand: Locked

Re: சமையல் குறிப்புகள் தெருஞ்சுக்க வாங்க.....

Post by KEE SRI » Fri Jan 17, 2014 8:39 am

:great: :thanks:
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”