இயற்கை கற்பிக்கும் புது புது பாடம்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

இயற்கை கற்பிக்கும் புது புது பாடம்

Post by ஆதித்தன் » Wed Feb 21, 2024 12:48 pm

எழுத்து எனக்கு புதியதல்ல
எழுதி எழுதியே வளர்ந்தவன்
ஏட்டுப் படிப்பு அதிகமில்லை
எழுந்து பேச மனமும் இல்லை
எதை பேச வேண்டும் வேண்டாம்
என்ற கட்டுப்பாடும் எனக்குள் இல்லை
எண்ணமெல்லாம் உயிர் ஆற்றல்
எடுத்ததெல்லாம் பூத ஆற்றல்
ஏதும் தெரியாமல் பிண்டமாய்
எல்லாம் நிகழ்விக்கும் அண்டத்துள்
அமைதியாய் இன்முகமாய் இரசிக்க
அமைந்த கூட்டத்தின் உள்வெளிப்பாடு
கற்பிக்கும் புது புது பாடம்
கற்க வேண்டும் ஒவ்வொரு நாளும்
நாடியதே சிந்தனையில் நிற்கும்
நலத்தினை நாடினால் வாய்க்கும்
நற்பல ஆரோக்கிய ஆலோசனைகள்
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”