Page 1 of 1

மிகையான பால் சுரப்பு

Posted: Tue Jan 02, 2024 4:36 am
by ஆதித்தன்
ஒவ்வொருநாளும் புதுவிதமான உடல் பிரச்சனைகள் பற்றி தெரிய வரும்பொழுது எல்லாம், கற்பதற்கு கடல்போல் ஏகப்பட்டது இருக்கிறது.. தனக்கு தெரிந்தது கடுகளவுதான் என்பது நன்றாகத் தெரிகிறது.

பிரச்சனைகள் உண்டான உடனே, அதனைத் தீர்க்கும் உபாயமும் கூடவே சேர்ந்து தொடங்கிவிடுவதுதான் நம் உடலில் இருக்கும் சிறப்பம்சம். ஆனால் அதனை உணர்வதுதான் இல்லை. கொஞ்சம் தெளிந்து பார்த்தால் , கவனித்தால் போதும் பிரச்சனை தீர்ந்துவிடும்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனை, அந்த பிரச்சனைக்காரணமும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக உள்ளது.

பொதுவாக ஒர் பிரச்சனைக்கான பெயர் சூட்டும் பொழுது, அந்தப்பெயர் மற்றொருவருக்கும் பொறுந்தும். ஆனால், பிரச்சனைக்கான காரணம், பிரச்சனையை தீர்க்கும் உபாயம் இரண்டும் ஒவ்வொருவருக்கும் தனிப்படும்.

கர்ப்பவதியாக இருக்கும் பெண், குழந்தையை பெற்றெடுக்கும் பொழுது, அவளது மார்பில் பால் சுரக்க ஆரம்பிக்கும். குழந்தையும் தாயின் மார்பில் வாய்வைத்து பாலை பருகும்.

குழந்தைக்கு பால் கொடுப்பதனை தாய் மகிழ்ச்சியாக செய்வாள்.

ஆனால், ஒர் பெண்ணுக்கு பால் சுரப்பு என்பது அதிகமாக உள்ளது. அதாவது குழந்தை குடித்து பசி தீர்ந்தாலும் மார்பில் பால் குறைவதில்லை. பலமுறை காம்பை ஊட்டினாலும் குறையவில்லை.

மிகை பால் என்பதும் பெண்ணுக்கு ஒர் அசெளகரியம்தான்.

மிகையினும் நோய் குறையினும் நோய் என முன்னோர் சொல்லிவிட்டார்கள்.

தொலைதூர சிகிச்சையாக எடுத்துக் கொள்வது என்பது, இதுபோன்ற பிரச்சனைகளை கையாள்வது பெரிதும் உதுவுகிறது.

உண்மையை சொல்லனும், அதுவும் கேட்க கேட்க உண்மையை சொல்லனும்.... ஆனால் நேரில் சொல்ல முடிவதில்லை. தொலைதூர சிகிச்சையில் தைரியமாக எல்லா கேள்விக்கும் உண்மையை சொல்லும் பொழுது, பிரச்சனையின் காரணங்கள் பல தெரிகிறது, அதற்கான உபாயமும் தோன்றுகிறது.

உடல் ஒர் சிறந்த மருத்துவர்... மனதளவில் தெளிவாக இருக்கும் பொழுது சிறப்பாக செயல்பட்டு, விரைவாக நோய் பிரச்சனையை குணப்படுத்துகிறது.

அமைதியாக உள்ளுக்கும் இருக்கும் சின்னச் சின்ன பிரச்சனைகளை ஆரம்பித்தில் தெளிவுப்படுத்திக் கொண்டால் பெரிய நோய்களை தடுக்கலாம்.