அக்குபங்சர் ஒர் அறிமுகம்- 5 ஜி தத்துவம்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12167
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
அக்குபங்சர் ஒர் அறிமுகம்- 5 ஜி தத்துவம்
பஞ்சபூதத் தத்துவத்தினை அடிப்படையாகக் கொண்ட மருந்தில்லா மருத்துவம் தான் அக்குபஞ்சர் மருத்துவம். மருந்தில்லாமல் ஒர் நோயினை குணப்படுத்திட முடியுமா? என்றால், மருந்தில்லாமல் உடலில் ஏற்படும் எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடிய தனி மருத்துவம்தான் இந்த அங்குபங்சர் மருத்துவம். அங்குபங்சர் சிகிச்சைமுறை பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கக்கூடிய ஒர் மருத்துவம் என்பதிலிருந்து அதன் சிறப்பு தெரிந்திருக்கும்.
நமக்கு நன்றாகத் தெரிந்தது, பஞ்ச பூதங்களாகிய காற்று, நீர், நெருப்பு, நிலம் மற்றும் ஆகாயம். இவ்வைந்தும் கலந்த கலவைதான் நமது உடல் என்பதனைத் தெள்ளத் தெளிவாக முன்னோர்கள் நமக்கு கொடுத்த பாடம்.
இந்த உடல் பூதங்களால் ஆனது எனும் பொழுது, அந்த பூதங்கள் ஐந்தையும் சரியாக புரிந்து கொண்டு கையாள்வதன் வழியாக நம் உடல் பிரச்சனைகளையும் தீர்க்க முடியும்.
பூதங்கள் ஐந்தும் ஒன்றை ஒன்று சார்ந்துதான் இருக்கின்றன, ஒன்று இல்லாமல் இல்லை என்பதுதான் இதன் நிலைப்பாடு. ஆரம்பம் என்ற ஆதி நிலை எவ்வாறாக இருந்திருக்கும் என்பதன் பொருள் இருளாக இருந்திருக்கும் என்பதாக நம்பப்படுகிறது. ஆதியிலிருந்து அந்தம் வரை என்று எட்டிப்பார்க்க முடியாத ஒர் வாழ்க்கை சுழற்சிக்குள் நாம் இருக்கிறோம் என்பதுதான் உண்மை. , அடி முடி காண விரும்பிய அயன் மால் இருவரும் ஏமாற்றமாய் திரும்பினர் என்ற ஒர் கதை உண்டு. வாழ்க்கை சுழற்சியிலிருந்து மீண்டுபோய் கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா? என்ற கேள்விக்குள் விழுந்த கதையாக இருக்க வேண்டாம். ஆனால், ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும், முட்டையிலிருந்துதான் கோழியும் முட்டையும் சுழற்சியாக தோன்றியிருக்க முடியும்.
அக்குபங்சர் ஒர் அறிமுகம் என்ற தலைப்பில், இது ஒர் தனிமருத்துவம், மருந்தில்லா மருத்துவம், வாழ்வியல் தத்துவம் - கடைபிடிக்க வேண்டிய 5G என ஒர் சிறப்பான விடியோ கொடுத்துள்ளேன். அதனை கேளுங்கள்.
ஆதித்தன் - திருவள்ளூர் - 9003032100
பஞ்சபூத தொடுசிகிச்சை - அக்குபங்சர்
- ஆதித்தன்
- Site Admin
- Posts: 12167
- Joined: Sun Mar 04, 2012 1:17 am
- Cash on hand: Locked
Re: அக்குபங்சர் ஒர் அறிமுகம்- 5 ஜி தத்துவம்
acupuncture introduction from my knowledge part 2 video above
and acupunture introduction from my knowledge part 3 video below