நிபா வவ்வால் வைரஸ் காய்ச்சலுக்கு மருந்து தயாரித்த கிழவன்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12049
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

நிபா வவ்வால் வைரஸ் காய்ச்சலுக்கு மருந்து தயாரித்த கிழவன்

Post by ஆதித்தன் » Wed Jun 05, 2019 11:14 pm

புதிய புதிய வைரஸ்கள் மனிதர்களை வந்து தாக்க ஆரம்பித்துவிட்டன. இதன் மூலம் உயிர் வாழவே கடினமான சூழல் உலகத்தில் காணப்படுகிறது.

நீர் இல்லாவிட்டாலும் சாவுதான். நீர் கிடைப்பது கடினமான தற்போதைய வெயில் காலத்தில், போராடியாவது நீரினைப் பெற்றுக் கொண்டுதான் மக்கள் இருக்கிறார்கள். அரசும் வாகனங்கள் மூலம் பல கிலோ மீட்டர் தொலைவிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து மக்களுக்கு வழங்கிவருகின்றனர்.

வாழ்வே ஒர் போராட்டம் தான், அதனை வாழ்ந்து காட்டு, வென்று காட்டு என்றுச் சொல்வார்கள். வைரசை வென்று வாழ போராடும் படித்த மருத்துவ விஞ்ஞானிகளுக்கும், வென்று வாழும் கிராமத்து விஞ்ஞானிகளுக்கும் நன்றியினை சொல்லிக் கொள்வோம். அவர்கள் உதவி கொண்டு அரசும் சரியான தீர்வினை மக்களுக்கு வழிகாட்டும்.

காலை கண் விழித்தவுடனே போராட்டம் ஆரம்பித்துவிடுகிறது என்று நினைத்தால், இப்பொழுது தூங்கும் பொழுதும் போராட வேண்டிய சூழலுக்கு நவீன ஐடி வளர்ச்சி கொண்டு சென்றுவிட்டது. தூங்கும் பொழுதுகூட வேலை செய்யும் அளவுக்கு, சேவைகள் அனைத்தும் 24 மணி நேரச் சேவையாக மாறிக் கொண்டிருக்கும் இன்றைய நவீன ஐடி உலகத்தில், தனிமனிதனின் போராட்டமும் 24 மணி நேரமாக மாறிக் கொண்டிருப்பதில் ஆச்சர்யமில்லை.

நாம் உயிர்க்கு பயந்து எதிர்த்து போராட வேண்டியதில் ஒர் செயலாக இரவில் உலா வரும் கண்ணில்லா வவ்வால் செய்யும் செயலால் உருவாகிவிட்டதாக செய்தித்தாள்கள் மூலம் மருத்துவத்துறை ஆலோசனை அறிவிப்புகள் தற்பொழுது வந்து கொண்டிருக்கின்றன.

பல்லாயிரம் ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் வவ்வால் மக்களுக்கு எந்தவொரு தொந்தரவினையும் பெரிதாகச் செய்யவில்லை. அப்படியே கொடுத்தாலும் மனிதன் அதனைக் கண்டு அச்சப்படாமல், விரட்டியடித்தான். தன் நலனுக்காக அதனை அடித்து சாப்பிடவும் செய்தான். ஆகையால், வவ்வால் தான் இதுநாள் வரையிலும் மனிதனைக் கண்டு அச்சம் கொண்டிருந்தது.ஆனால், இன்று வவ்வால் வைரஸ் என்ற நிபா நோய் கிரிமியை மக்கள் மத்தியில் வவ்வால் பரப்ப ஆரம்பித்துவிட்டதாக, நன்கு வளர்ச்சி அடைந்த நிரூபணம் செய்யப்பட்ட அறிவியல் மருத்துவமாக நம்பப்படும் மருத்துவத்துறை நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆகையால் இப்பொழுது மனிதன் அச்சம் கொள்ளும் அளவிற்கு பெரிய ஆப்பாக வவ்வால் வைத்துவிட்டது என்று சொல்லலாம். இதனால், கொசு ஒழிப்புத் திட்டம்போல், இடைக்கால வவ்வால் ஒழிப்பு திட்டத்தினை அரசே முன்னெடுத்தாலும் ஆச்சர்யமில்லை. ஏனெனில் மக்கள் நலனே அரசின் முதல் கடமை அல்லவா.
நிஃபா வைரஸ் அறிகுறிகள்

காய்ச்சல், தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல்,மயக்கம், சிலருக்கு வலிப்பு ஏற்படலாம், 10 முதல் 12 நாட்கள் இந்த அறிகுறிகள் தொடர்ச்சியாக காணப்படும். அதன் பிறகு சுயநினைவு அற்றநிலையில் மரணம் ஏற்படும்.

தடுப்பதற்கான வழிமுறைகள்

பறவைகள் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது. நிஃபா வைரஸ் பாதிக்கப்பட்டவருடன் தொடர்புள்ளவர்கள் கைகளை நன்றாக கழுவ வேண்டும். நோயாளியை சந்திக்கும்போது முகமூடி, கையுறைகள் அணிய வேண்டும். வவ்வால்கள் அதிகம் உள்ள பகுதிகளிலிருந்து எடுக்கப்படும் பனை, தென்னை பானங்கள் அருந்தக்கூடாது.

இந்நிலையில் வவ்வால் கடித்து அழுகிய பழங்கள் விழுந்த கிணற்றுத் தண்ணீர் மூலமாகவும் நிபா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது
மருத்துவ நிபுணர்கள் கொடுத்த நிஃபா வைரஸ் நோய் பற்றிய தகவலைப் படிக்கும் பொழுது எய்ட்ஸ் நோய்க்கான அறிகுறிகளில் பாதியினைச் சொல்லி, உங்களுக்கு சீக்கிரம் மரணம் தான், இன்னும் மருந்து தயாரிக்கப்படவில்லை என்று பல வருடங்களுக்கு முன்னர் மலேசியா மக்களிடம் சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில், மலேசியாவில் தான் முதன் முதலில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அந்த வைரஸ் கொசு மூலம் பரவுவதாகவும் அந்த கொசுவிலும் இந்த கொசு என கியூலக்ஸ் கொசுதான் காரணம் தான் என்றுச் சொல்லி, வாயிலில் கியூவில் நின்று அந்த கொசுக்களை பிடித்து கொல்ல ஆரம்பித்தனர், ஆனால் அதுவும் இல்லையாம். பன்றி மூலம் உருவாகிறது என்று பல பன்றிக்கூடங்களை காலி பண்ணிட்டாங்க. அதே நேரத்தில் வைரஸ் நூற்றுக் கணக்கானவரை காலி செய்துவிட்டதாம். ஆனால் பன்றிக்காரணம் என்றது அப்படியில்லை, வவ்வாலும் காரணம் என பின்னாளில் பேசிக்கிட்டு இருக்கையில் சரி, வைரஸ் போய்ச்சிடானு இருந்தால், வங்காளதேசத்தில் அடுத்தப்படியாக வந்து 150 நபர்களுக்கும் மேலான நபர்களின் உயிரை வாங்கிவிட்டது. வவ்வால் பரப்புவதனைக் காட்டிலும் நோய் தாக்கம் அடைந்த நபர் மூலம் அடுத்த நபர்க்கு மிக வேகமாக நோய் பரவுதாம்.

கடந்த வருடம் நம் நாட்டில் கேரளாவின் கோழிக்கோடு பகுதியிலும் நிபா வைரஸ் தாக்குதல் நடத்த ஆரம்பித்தது. அந்த நேரத்தில் பலர் உயிர் இழந்ததாகவும், நிபா நோயாளிக்கு சிகிச்சை அழித்த நர்ஸ் லினி என்ற பெண்ணும் நோய் பாதிக்கப்பட்டு இறந்தது மக்களை மிகப்பெரிய அச்சத்திற்கு உள்ளாக்கியது. இந்த சூழலில் மருத்துவ விஞ்ஞானிகள் சொல்வதனைக் கேட்டுக் கொள்வோம் என்று மக்கள் பயத்திற்கான தீர்வாக அரசு மருத்துவ விஞ்ஞானிகள் சொல்லியபடி, காய்ச்சல் நோய்கள் உள்ள அனைவருக்கும் சிறப்பு மருத்துவ பாதுகாப்பு வழங்கினார்கள். கொஞ்ச நாளில் வைரஸ் காணாமல் போனது.

எய்ட்ஸ் ஹைச்.ஐ.வி வைரஸ் நிறைய பேர கொன்றது. அதன் பின்னர் மக்கள் பயந்து ஒழுக்கமாக நடந்து கொண்டார்கள் அல்லது ஒழுங்காக உறை போட்டு பாதுகாத்துக் கொண்டார்கள் என்பதனால், அந்த வைரஸ் இப்போ கொஞ்சம் ஆட்டத்தினை குறைத்துக் கொண்டது என்று சொல்கிறார்கள். அவ்வப்பொழுது அங்காங்கே எய்ட்ஸ் நோயாளிகள் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள் அல்லது பயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இது அந்த வைரஸ்க்கு தெரியுமா தெரியுதா என்று தெரியவில்லை.

பரவித் தாக்கும் சக்தி உடைய நிபா வைரஸ் நீண்ட நாட்களாக எங்குபோய் ஒழிந்திருந்ததோ தெரியவில்லை, மீண்டும் களத்தில் குதித்து தாக்க ஆரம்பித்துவிட்டது என்பது சமீபத்தில் கேரளாவின் திருச்சூர் பகுதியில் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் இளைஞரைத் தாக்கி உயிரை வாங்கிவிட்டது. அவ்ளதான், நிபா வைரஸ் வந்துவிட்டது என மருத்துவ விஞ்ஞானிகள் உஷார் ஆகி, நோயாளிகளை சிறப்பு பரிசோதனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி, நிபா பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு வந்திருந்த மருத்துவ விஞ்ஞானிகள் அணிந்திருந்த ஆடையுடன் கூடிய புகைப்படத்தினை செய்தித்தளத்தில் பார்த்து, உங்களுடன் கீழே பகிர்ந்துள்ளேன். 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் நிபா சந்தேகத்தின் அடிப்படையில் சிறப்பு தனி மருத்துவ முறையில் சிகிச்சை கொடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Image

ஒர் தனித்துவம் தெரிய வேண்டும். அப்பொழுதுதான் அதன் கெத்து தெரியும். காய்ச்சல் தான் என சர்வ சாதரணமான சாமானியமான டாக்டர் ஆடையுடன் நோயாளிகளை பரிசோதித்தால் நிபா வைரஸ்க்கான எபக்ட் எப்படி தெரியும். அதான், ராக்கெட்டில் விண்வெளிக்கு பயணம் செய்வது போன்ற தனித்துவமான விஞ்ஞான டாக்டர் ஆடையுடன் மருத்துவ விஞ்ஞானிகள் களத்தில் குதித்துவிட்டனர். கண்ணால் பார்க்கவே முடியாத அந்த நிபா வைரஸ் மீது இல்லாத பயம், மருத்துவ விஞ்ஞானிகள் அணிந்திருந்த ஆடையைப் பார்த்தவுடனே, மக்களுக்கு நிபா வைரஸ் மீதான ஒர் பயம் வந்திருக்கும். யார்க்கு வந்திருக்கிறதோ, இல்லையோ எனக்கு வந்திடுச்சி.... இனிமேல் எந்தவொரு மருத்துவமனை பக்கமும் எட்டிக்கூட பார்த்திடமாட்டேன். ஏனென்றால், ஏதேனும் வைரஸ் என்ன வந்து தாக்கிடிச்சின்னா.. அதுவும் நிபா வைரஸ் வந்து ஓட்டிக்கிடடுன்னா.... காய்ச்சல் வரும், தலைவலி வரும், வாந்தி வரும், தலைசுற்றல் வரும், அப்புறம் மயக்கம் வரும், மயக்கத்திலே உயிரும் 12 நாட்களில் போய்டலாம்... இது தேவையா... சும்மா இருந்த நான்.... ஏதோ சின்ன காய்ச்சலுக்கு மருத்துவமனைக்கு போய், அங்கு எவனோ வெளிநாட்டுக்காரனோ, அல்லது பன்றிக்கு சொந்தக்காரனோ, வவ்வால் தோட்டத்துக்காரனோ எவனோ ஒருவன் அந்த மருத்துவமனைக்கு வந்து நிபா வைரசை இறக்குமதி செய்திட்டு போய்டுவான்... அதுவும், நான் ரொம்ப நன்றாக இருக்கிறேன் என்று என் உடலில் வந்து ஓட்டிக்கிற்றின்னா... இது தேவையா... இது தேவையா உனக்கு!!! அதான் வீட்லேயே கிழவன் சொன்னத மனசில வைச்சிக்கிட்டு பேசாமல் படுத்துக்கிறது ரொம்ப சேப்டி. மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் வாங்க வேண்டிய சேப்டி ஆடைச் செலவும் மிச்சம், மருத்துவச் செலவும் மிச்சம். அம்புட்டு பயபுள்ள வைரசும், பாக்ட்ரியாவும் ஆஸ்பத்திரிலதான் கண்ணுக்குத் தெரியாமல் குடியிருக்கின்றன. ஆகையால், அங்கு போகாமல், அங்கு செல்லும் டாக்டர்கிட்ட கூட சகவாசம் வைச்சிக்காமல் இருப்பது ரொம்ப நல்லது. அதான் சேப்டி. ஏன்னா, டாக்டர்ங்க அவங்க அவங்கள காப்பாத்திக்கவே ரொம்ப கடினப்பட்டு உயிரை பணயம் வைத்து, இந்த நோயாளிகள் எப்படியோ இந்த நிபா வைரசை தாங்கிட்டு வர்றாங்க, அவங்கள குணப்படுத்துவதே, அவர்களுக்கு சேவை செய்வதே எங்கள் பணி என்று, வேலை செய்கிறார்கள் பாருங்க... அது எல்லோராலும் முடியுமா என்ன.

ஒர் புதிய நோய்க்கு மருந்து தயாரிக்க வேண்டும் என்றுச் சொன்னால், பல்வேறு ஆராய்ச்சியும் பரிசோதனையும் காலச் சூழலையும் கடந்து நிரூபணம் செய்ய 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும். ஆகையால், தற்போதைக்கு எந்த அளவுக்கு நிபா வைரஸ் காய்ச்சலுக்கு மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியினை மருத்துவத்துறை வெளியிட்டிருக்கிறது என்பது தெரியவில்லை. மருந்து தயாரிக்கப்பட்டிருந்தால், இவர்கள் இந்த அளவுக்கு பயப்படமாட்டார்கள். இருந்தாலும் சிகிச்சை என்பது எல்லா நோயாளிக்கும் உண்டு. முடிந்தவரை மக்கள் உயிரைக் காப்பாற்றுவதே கடமை.

வவ்வால் நிபா வைரசை பரப்பி விட்டுக் கொண்டிருக்கிறது என்று செய்தித்தாளில், நிபா வைரஸ் பரவும் விதத்தில் நான் படித்திருக்கிறேன். ஆனால், ஒர் ஊர்ல கிழவன் என்னன்னா, வவ்வால் இருப்பதால் எங்கள் ஊரில் நோய்கள் இல்லை என்று சொல்லி இருக்கிறார். அதனை அந்த ஊர் மக்கள் எல்லோரும் ஆமோதிக்கின்றனர், அதனை நம்பி அந்த வவ்வால்களை போற்றுகின்றனர். கொஞ்ச தொலைவில் பட்டாசு வெடித்தால் கூட, வவ்வால் கூட்டம் கலைந்துவிடும் என்பதற்காக, ஏரி அருகே வவ்வால் வசித்தாலும், தங்கள் ஊருக்குள் கூட பட்டாசு வெடிப்பது இல்லை என அந்த கிராமமே முடிவெடுத்து, அந்த வவ்வால்களை பலநூறு ஆண்டுகளாக குடும்பம் குடும்பமாக வாழ வழிவகை செய்துள்ளனர். அந்த ஊர் ஓசுர் அருகே உள்ள கொலதாசபுரம். இந்த ஊர்ல வவ்வால் வளர்க்கிற மாதிரி, தமிழகத்தில் மற்றொரு ஊரான சேலம் ஊனத்தூர், அங்கேயும் வவ்வால் பயந்து காலி செய்து இடம்பெயர்ந்திடக்கூடாதுன்னு தீபாவளிக்கு கூட பட்டாசு வெடிப்பது இல்லையாம். இந்த வவ்வால்கள் பழந்தின்னி வவ்வால் குடும்ப வகையச் சேர்ந்ததாம். பல வருடங்களாக இவர்களும் வவ்வால் சாப்பிட்ட பழங்களை சாப்பிட்டிருக்க வாய்ப்புண்டு. நான் கூட சின்ன வயசில் காலையில் மாந்தோப்புக்கு ஓடிப்போவது, வவ்வால் அடிச்சிப்போட்ட, கடிச்சிப்போட்ட பழங்களை எடுக்கத்தான். அப்படி வவ்வால் கடிச்ச பழங்களை சாப்பிட்டு வரும் பழக்கமென்பது பல நூற்றாண்டு காலத்திற்கு முன்னிருந்தே இருந்த வழக்கம். வவ்வால் கடிச்ச சப்போட்டா பழம், கொய்யாப்பழம் என கடந்த இரண்டு வருடத்திற்கு முன் கூட நான் சாப்பிட்டிருக்கேன்.

இப்பொழுது என்னென்னா, வவ்வால் சாப்பிட்ட பழங்கள் தின்றால் நிபா வைரஸ் வந்திடும் என்று செய்திகள் சொல்கின்றன. ஒர் வேளை, அது நிபா வைரஸ் தாக்கப்பட்ட வவ்வாலாக இருக்கலாம். நிபா வைரஸ் தாக்கப்பட்டவரிடமிருந்துதான், நிபா நோய் பரவும் என்பது போல, நிபா வைரஸ் தாக்கப்பட்ட வவ்வாலாக இருக்கும். நம்ம ஊர்ல எல்லா வவ்வாலும் நல்ல வவ்வால்தான்.

ஒர் வேளை, மலோசியாவில் 1997 ஆம் ஆண்டு முதன் முதலாக நிபா வைரஸ் தாக்குதல் நடத்த ஆரம்பித்த பொழுது அதற்கான மருந்தில்லாமல், நிபா வைரஸ் உருவாக காரணமாக இருக்கும் பன்றிகளை கொல்வதே தீர்வு என 6000 கோடி மதிப்பிலான பன்றி வியாபரத்தினை அன்றைய சூழலில் வீழ்ச்சி அடைய வைத்தது போல... கொசு மூலம் வைரஸ் பாக்டிரியாஸ் பரவுகிறது என்று கொசுவினை கொசு மருந்து அடித்து தெருத்தெருவாய் அழிப்பது போல, வவ்வாலை அழிக்கப்போறோம்னு ஊர் ஊரா அழிக்கக் கிழம்பிடுவாங்களோன்னு நினைக்கத் தோன்றுகிறது.

அதுவும், பல ஆண்டுகளாக வவ்வாலை வளர்த்து வரும் இதுபோன்ற கிராமங்களின் எண்ணத்தினை கூட சிதறிடித்து, வவ்வால் உயிர்க்கு ஆபத்தான நோய்களை பரப்பக்கூடியது, நீங்கள் வளர்ப்பதால் பக்கத்து ஊரில் வாழும் மக்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தலாம் என்று, அதாவது,, இப்பொழுது கிராமங்களில் எல்லாம் வீடு வீடாக சென்று தண்ணீர் தொட்டி சுத்தமாக இருக்கிறதா என்றுச் சொல்லி ஏதோ கெமிக்கல் பவுடரை தூவி விடுகிறார்கள். கூடாது என்று அவர்களுக்கு மறுப்பு தெரிவித்தால், உங்கள் மூலமாக மற்றவர்களுக்கு நோய்க்கிரிமிகள் ஊருக்குள் பரவுவிடும் என்று குற்றச்சாட்டு சொல்லி கட்டாயப்படுத்தி செய்துவிட்டுச் செல்கிறார்கள். இப்படி, மக்கள் தன் வீட்டு தண்ணீர் தொட்டியினையே அரசு அங்கீகாரம் வழங்கிய தன்னார்வுத் தொண்டு நிறுவனம் அல்லது அரசுத்துறை சார்ந்த ஊழியர் என்ற உரிமையுடன் இப்படி எல்லாம் செய்ய முடியும் பொழுது, வாயில்லா கொசுவை கொல்வதுபோல, வவ்வால்களை கொன்றால் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

கொசுவை கெமிக்கல் மருந்து அடித்து, அதனை கூண்டோடு ஒழிக்கிறேன் என்று முயற்சித்து இன்று வரையிலும் முயற்சித்து கொண்டிருப்பதோடு, சும்மா கிடந்த கெமிக்கலை எடுத்து அடித்து சுகாதாரமான சூழலையும் கெடுத்துவிடுகிறார்கள் என்பதுதான் வேதனை.

சரி, இந்த நிபா வைரசை எப்படி ஒழித்து, நம்மை காப்பாற்ற போகிறார்கள்.

காரணம் இல்லாமல் காரியமில்லையே, ஒர்வேளை தன்னை நிபா வைரஸ் தாக்கிச்சின்னா அதுக்கு என்ன காரணம் இருக்கும்?

யோசிச்சி யோசிச்சி... ஒர் நாள் புல்லா யோசிச்சிட்டே இருந்ததுல, ஒர் கிழவன் சொன்னது நினைவுக்கு வந்தது.

தம்பி, ஐன்ஸ்டீன் தத்துவம் ஆங்கிலேயன் தத்துவம் எல்லாம் படிக்கிறீங்க, கொஞ்சம் நம்ம ஊர் கழிவு நீக்கத் தத்துவம், அன்னமயத் தத்துவம் படிங்க என்று சொன்னார்.

அன்னமயத் தத்துவத்தினை படிச்சதும் புரிஞ்சிடுச்சி, கழிவு நீக்கத் தத்துவம் படிச்சதும் பயம் போய் தெளிவும் கிடைச்சிடுச்சி... உயிரணுவின் அடிப்படை இயக்கம் படிச்சதும் எல்லாம் சரி, நிபா வைரஸ் வரட்டும் வரட்டும் வந்தா இருந்தா திண்ணுக்கும், இல்லன்னா ஓடிக்கும், அம்முட்டுத்தான்.

உயிரைக் கொன்றிடும் என்று சொல்கிறார்கள், இப்படி சர்வ சாதரணமாக இருந்தா திண்ணுக்கும், இல்லன்னா ஓடிக்கும் என்று சர்வ சாதரணமாக சொல்கிறேனே என்று நினைக்கிறீர்களா, அது அப்படித்தான்.

மனிதனைத் தவிர்த்து மற்ற அத்தனை உயிரினமும் தன் பசிக்கு உணவு உண்ணும் வேலையையும் உண்ட உணவிலிருந்து உயிர்சத்தினை எடுத்துவிட்டு கழிவுகளை வெளியேற்றும் வேலையையும், உயிர்ச்சத்திலிருந்து தன் இன உயிரை உருவாக்கும் வேலையையும் மட்டும் தான் செய்கின்றன. வேறெந்த வேலையையும் பெரிசா செய்வதில்லை. குறிப்பா பிற உயிரினங்களுக்கு தீங்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எந்தவொரு உயிரினத்திற்கு இருப்பதில்லை.

மானை வேட்டையாடி திண்ணும் சிங்கம் கூட, மானை வேட்டையாடி மான் கூட்டத்தையே அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஒர்பொழுதும் செயல்பட்டது கிடையவே கிடையாது. தன் பசிக்கு மானை வேட்டையாடி உண்கிறது, உண்டு பசியாறியப்பின், கொழு கொழு இளம் மான் வந்தாலும் அதனை சீண்டுவதில்லை. அதாவது தனது உணவான இறைச்சியை நாடி பசிக்கு வேட்டையாடுகிறது. நல்லா இறைச்சி சாப்பிட்டு தெம்பாக இருக்கிறேன், ஊர்ல போய் நாலு மனிதனையாவது அடிச்சி கொன்று போட்டுட்டு வருவோம்னு வருவதில்லை அல்லது வேற போட்டி மிருகங்களை அடிச்சி கொல்வோம்னு தேவையில்லாமல் செய்வதில்லை.

அப்போ நிபா வைரஸ் தன் பசிக்குத் தான் உணவினை உட்கொள்ள மனிதன் மீது தாக்குதல் நடத்துகிறது. அப்படியென்றால், அதற்கான உணவினை கொண்டுள்ள மனிதன் மீதுதான் தன் தாக்குதலை நடத்துகிறது. அதுவும், அந்த உணவு இருக்கும் வரைதான். அதற்கான உணவு இல்லை என்றால் காணாமல் போய்விடும் அளவிற்கான சக்திதான் அதனிடம் இருக்கிறது. மனிதனையே தாக்கி உண்ணும் அளவிற்கு எல்லாம் அதனிடம் சக்தியில்லை. மனித இறைச்சியை இதனால் திண்று செரிமானம் செய்யவும் முடியாது. அப்படி மனித இறைச்சியை திண்று செரிமானம் செய்யக்கூடிய வைரசாக இருந்தால் அதன் விளைவு ரொம்ப மோசமாக இருந்திருக்கும், கொஞ்ச நாளில் காணாமல் போவது என்பது எல்லாம் நடக்காத காரியம்.

அப்போ அந்த உணவு என்பது, மனிதனிடம் இருக்கக்கூடாத கழிவு. மனிதனிடம் இருக்கக்கூடாத கழிவினை உண்டு தீர்க்கவே இந்த வைரஸ் வருகிறது. அந்த கழிவு இருக்கும் மனிதன் நோயாளியாகத்தான் இருப்பான். அப்படி நிபா வைரஸ்க்கான கழிவினை கொண்ட நோயாளி மீதுதான் நிபா வைரஸ் உட்புகுந்து தன் உணவை திங்கிறது.

உயிரினங்கள் புதியதாக தோன்றவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தாலும், இயற்கையை பாதுகாக்கும் வகையில் அன்னமயத் தத்துவப்படி, கழிவு நீக்கத் தத்துவப்படி புதிய உயிரினம் தோன்றுவதற்கான வாய்ப்பிருக்கிறது, தோன்றுகிறது என்பதனைத்தான், புதிய புதிய வைரஸ்கள் கண்டுபிடிப்பு உறுதிப்படுத்துகிறது.

புதிய புதிய கழிவுகள் உருவாகும் பொழுது புதிய புதிய உயிரின வைரஸ்களும் உருவாகும். அப்படி உருவாகியிருப்பது நிபா வைரஸ்.

நிபா வைரஸ்க்கான உணவு என்ன, அந்த கழிவு என்ன, அந்த கழிவு எதனால் உருவானது என்ற மூலத்தினை கண்டுபிடித்து அழித்துவிட்டால், நிபா வைரசினை பட்டினியில் அழித்துவிடலாம்.

நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

அப்போ, கிழவன் கணக்குப்படி விதைச்சது தானே அறுவடைக்கு வரும். வாயில விதைச்சது என்னன்னு பாரு, அது தேங்கி இருக்கிற இடத்த சுத்தப்படுத்து, திரும்ப வாய் வழியா செல்லாமல் விதைச்சதில் அந்த விதையை கண்டுபிடிச்சி களையெடு, அவ்ளதான்.

கொசு ஒழிக்கச் சொன்னா சாக்கடைய சுத்தப்படுத்தச் சொல்றீங்களா?
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”