Page 1 of 1

ஆஞ்சியோ இருதய சிகிச்சை - தோல்வியடைந்த கண்டுபிடிப்பு

Posted: Sun Apr 14, 2019 6:41 am
by ஆதித்தன்
அலோபதி மருத்துவமுறை தினம் தினம் புதிய புதிய நோய்களையும், நோய்க்கிருமிகளையும், புதிய சிகிச்சை முறைகளையும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஆனால், கண்டிபிடித்தவை எல்லாம் சரியானவையா? என்பதனை அதன் சிகிச்சை பெற்றவர்களின் நிலமையிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.

நம் கூடவே வாழ்ந்த பெரியோர்களிடமிருந்த ஆரோக்கியம், தற்பொழுது வாழும் சராசரி வயதினரிடம் கூட இல்லை.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு பலர் ஹார்ட் அட்டாக்கினால் இறந்தனர். அதற்கு பின்னர், அலோபதி மருத்துவமுறை பல சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தியது.... அதில் ஒன்றுதான் ஆஞ்சியோ இருதய சிகிச்சை.

அந்த சிகிச்சைப் பெற்றவர்களும் மிண்டும் பல நிலைக்கு வந்துவிட்டார்களா என்றால் இல்லை. அன்றிலிருந்து முழுமையான நோயாளி.

ஒர் சிகிச்சை என்பது அவரைக் குணப்படுத்த வேண்டுமே தவிர நோயாளியாக மாற்றுதல் கூடாது.

அக்காலத்தில் சாலை வைத்து, நோய்களை வழியனுப்பி வைத்தனர்.

இன்று, மனை வைத்து இல்லம் வைத்து நோய்களை வாழ வைக்கிறார்கள், வாழும் மனிதனிடம்.

அதனைக்காட்டிலும் கொடுமை..... இலவச பரிசோதனை எலியாகவும் மனிதர்களை பயன்படுத்தும் பெரிய பெரிய ஆராய்ச்சி மருத்துவமனைகள் பல உள்ளன.

தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் சாதலும் அவற்றோரன்ன!!

நோய்கள் நாம் செய்த தவறுகளால் வந்தவையே.... ஆகையால், நேற்று... நேற்று... நேற்று என்று பின்னோக்கி தன் தவறுகளைப் பார்த்து திருத்திக் கொண்டாலே தவிர, நோய்களை விரட்டுவது கடினம்.