Page 1 of 1

ஒர் பக்க கால் வலிக்கிறதா? உடனடி தீர்வு

Posted: Mon Nov 05, 2018 7:42 am
by ஆதித்தன்
தற்பொழுதை உணவு பழக்க வழக்கம் தவறுதலாக இருப்பதனால் சீரணக்கோளாறு என்பது சிலர்க்கு இருக்கலாம்.

அப்படி செரிமானத்தில் பிரச்சனை ஏற்பட்டு, அசுத்தமாகி வாயுடன் கலந்தால் அதிகமானால் நேராக காலைத்தான் பாதிக்கும்.

ஆரம்பக்கட்டக் காலத்தில் கால் திடீரென வலிப்பது என்பது ஒர் காலத்தாகத்தான் இருக்கும்.. நாள்பட நாள்படத்தான் இரண்டு காலுக்கும் என்று பரவும்.

அப்படி இரண்டு காலுக்கும் பரவுகிறது என்றுச் சொன்னால், நீங்கள் சரியான நோய் மூலக் காரணம் நாடி தீர்வு காணவில்லை என்பதுதான் காரணம்.

சரியான மூலக்காரணம், உணவில் இருக்கிறது என்றுச் சொல்லிவிட்டேன்... ஆகையால் உணவு உண்ணும் பழக்கத்தில் இருக்கும் தவறினை திருத்திவிட்டால், அடுத்து நோய் வருவதனை தடுத்துவிடலாம்.

சரி, ஆரம்பமாக இப்போ ஒர் கால் மூட்டு வலிக்கிறது என்றுச் சொன்னால்... அதனைத் தீர்ப்பது ரொம்ப எளிது.

இராசயனங்களுக்கான பெரும்பாமையான இயற்கை மூலக்கூறுகள் காற்றில் இருக்கின்றன. அந்த இயற்கை வேதிப்பொருளைக் கொண்டு நமது நோயினை இயல்பாகக் குணப்படுத்த, அப்பகுதிக்கு காற்றினைக் கொண்டு செல்லுதல் வேண்டும்.

வலது கால் , இடது கால் என்று இரண்டு இருப்பது போல், சந்திர சுவாசம், சூரிய சுவாசம் என சரத்தில் இரண்டு பிரிவாக உள்ளது.

நாம் சுவாசிப்பது என்பது, இடது மூக்கு வழியாக அல்லது வலது மூக்கு வழியாக என பெரும்பாலும் ஏதேனும் ஒர் பக்க மூக்கு வழியாகவே சுவாசம் இருக்கும்.


இடது கால் வலிக்கிறது என்றுச் சொன்னால், இடது பக்க மூக்கினை விரலால் அடைத்துக் கொண்டு, வலது பக்க மூக்கால் நன்றாக மூச்சினை உள்வாங்குங்கள்..

வலுது கால் வலிக்கிறது என்றுச் சொன்னால், வலது பக்க மூக்கினை விரலால் அடைத்துக் கொண்டு, இடது பக்க மூக்கால் நன்றாக மூச்சினை உள்வாங்குங்கள்.

நிதானமாக... நீண்ட மூச்சாக உள்ளே வாங்கும் பொழுது, மனதினை வலிக்கும் இடத்திற்குச் செலுத்துங்கள்.

மனதின் போக்கிலே மூச்சுக்காற்றும் தேவையான இடத்திற்கு பயணிப்பதோடு, உயிரோட்டத்தினையும் மேன்மைப்படுத்தி பாதிக்கப்பட்ட திசுக்களை புத்துணர்ச்சி கொடுத்து சுறு சுறுப்பாக இயங்க வைக்கிறது.

திசுக்களின் இயக்கம் தொடங்கிவிட்டால், இருக்கும் அசுத்த வாயுக்கள் வெளியேற்றப்படும்..

கால் வலியும் குணமாகிவிடும்.

ஆரம்பக்கட்ட சாதாரண செரிமானக் கோளாறினால் உருவாகும் கால் மூட்டு வலியாக இருந்தால் உடனே குணமாகிவிடும்.

ஆரம்பத்திலேயே தனக்கான செரிமான சக்தியினை உணர்ந்து கொண்டால், அடுத்து அதுபோன்ற செரிமானக் குறைபாடினைக் கொடுக்கும் உணவுகளைத் தவிர்த்தால் அடுத்தடுத்து வலி உண்டாவதை தவிர்த்துவிடலாம்.

அதுமட்டுமில்லாமல், வயிற்றினையும் ஒவ்வொரு மாதமும் சரியாகச் சுத்தம் செய்துவிட்டால்... நோய் குறைவு.


அதிக வலி இருப்பதாக நினைப்பவர்கள், பாரம்பரிய பூத நாடி மருத்துவ தொடு சிகிச்சையை ஏதேனும் ஹீலரிடம் எடுத்துக் கொண்டு, உணவு பழக்கத்தினை சீர்படுத்திக் கொண்டாலும் விரைவில் குணமாகும்.