தாங்க முடியாத பல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் சில இயற்கை வழிகள்!

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
SUGAPRIYA
Posts: 81
Joined: Fri Sep 11, 2015 9:11 am
Cash on hand: Locked
Bank: Locked

தாங்க முடியாத பல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் சில இயற்கை வழிகள்!

Post by SUGAPRIYA » Wed May 30, 2018 10:34 am

https://snag.gy/dh6wfE.jpg
வாழ்நாளில் ஒவ்வொருவரும் ஒருமுறையாவது சந்திக்கும் ஓர் வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனை தான் பல் வலி. ஒருவருக்கு பல் வலி எப்போது வேண்டுமானாலும் வரலாம். பல் அல்லது ஈறுகளில் தொற்றுக்கள் ஏதேனும் ஏற்பட்டிருந்தால், அப்பகுதியில் வீக்கம் மற்றும் ஈறுகளில் கிருமிகள் நிறைந்த திரவம் நிரம்பியிருக்கும். இந்நிலையில் கடுமையான மற்றும் கூர்மையான பல் வலியால் அவஸ்தைப்படக்கூடும். ஒருவரது வாய் சுகாதாரம் மோசமாக இருந்தால், அவர்கள் பல்வேறு பல் மற்றும் ஈறு பிரச்சனைகளால் கஷ்டப்படுவார்கள். மேலும் சிலர் தங்களது வாயில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகி சரிசெய்யாமல் விட்டுவிடுவதால், நிலைமை மோசமாகி, தாங்க முடியாத பல் வலியால் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. பெரும்பாலும் பல் வலியானது இரவு நேரத்தில் கடுமையானதாக இருக்கும். இந்நிலையில் நடு ராத்திரியில் பல் மருத்துவமனைக்கு செல்ல முடியாது.

இம்மாதிரியான சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு பல் வலிக்கு நிவாரணம் காணலாம். உங்களுக்கு பல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் இயற்கை வழிகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.


https://snag.gy/FYTdie.jpg

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா எப்பேற்பட்ட வீக்கத்தில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். ஏனெனில் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. மேலும் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், பல் வலியை உண்டாக்கும் தொற்றுக்களை சரிசெய்யும். அதற்கு நீரில் நனைத்த பஞ்சுருண்டையை பேக்கிங் சோடாவில் தொட்டு, வலியுள்ள இடத்தில் வையுங்கள். இல்லாவிட்டால், நீரில் பேக்கிங் சோடாவை கலந்து, அந்நீரால் வாயைக் கொப்பளியுங்கள்

https://snag.gy/IU6uBn.jpg
கிராம்பு எண்ணெய்

கிராம்பு எண்ணெயில் உள்ள இயூகினால் என்னும் உட்பொருள், பல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு 1-2 துளிகள் கிராம்பு எண்ணெய் இருந்தால் போதும். அதுவும் இந்த எண்ணெயை வலியுள்ள பல்லின் மீது தடவி, சிறிது நேரம் ஊற வையுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை பயன்படுத்துங்கள்.
https://snag.gy/0IsoDt.jpg
இஞ்சி

இஞ்சி பல் வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். இது ஈறுகளில் உள்ள வீக்கம், அழற்சி மற்றும் வலி போன்றவற்றைக் குறைக்கும் திறன் கொண்டது. இந்த இஞ்சியை மிளகுத் தூளுடன் சேர்த்து, நீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து, வலியுள்ள இடத்தில் வைத்து, சில நிமிடங்கள் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் பல் வலி போய்விடும்.
https://snag.gy/RYlM6w.jpg
பூண்டு

பூண்டில் உள்ள மருத்துவ பண்புகள், பல் வலிக்கு நல்ல தீர்வை வழங்கும். இதில் உள்ள அல்லிசின் என்னும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், தொற்றுக்களை உண்டாக்கிய கிருமிகளை அழித்து, வலியைக் குறைக்கும். ஆகவே பல் வலி இருந்தால், ஒரு பல் பூண்டு எடுத்து, கல் உப்பு சேர்த்து தட்டி, வலியுள்ள இடத்தில் வையுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை செய்ய உடனடி தீர்வு கிடைக்கும்.



https://snag.gy/FfUs0K.jpg

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் பீனோலிக் உட்பொருட்கள் உள்ளன. இது அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்று செயல்படும். ஆகவே பல் வலி இருக்கும் போது, பஞ்சுருண்டையில் ஆலிவ் ஆயிலைத் தொட்டு, வலியுள்ள இடத்தில் வையுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்யுங்கள்.
https://snag.gy/x76oHk.jpg
வெங்காயம்

வெங்காயத்திற்கும் பல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் திறன் உள்ளது. மேலும் வெங்காயம் வாயில் உள்ள கிருமிகளை அழித்து, வலியைப் போக்கும். அதுவும் சின்ன வெங்காயத்தை பல் வலி உள்ள இடத்தில் வைத்து 2 நிமிடம் கடித்துக் கொள்ளுங்கள். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யுங்கள். இதனால் உங்கள் பல் வலி காணாமல் போகும்

வெதுவெதுப்பான உப்பு கலந்த நீர்

வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரால் வாயைக் கொப்பளியுங்கள். இதனால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வீக்கம் குறைந்து, வலியும் போய்விடும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”