கோடையில் சரும புற்றுநோய் வராம இருக்கணும்-ன்னா, இதெல்லாம் சாப்பிடுங்க...

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
SUGAPRIYA
Posts: 81
Joined: Fri Sep 11, 2015 9:11 am
Cash on hand: Locked
Bank: Locked

கோடையில் சரும புற்றுநோய் வராம இருக்கணும்-ன்னா, இதெல்லாம் சாப்பிடுங்க...

Post by SUGAPRIYA » Tue May 29, 2018 5:04 pm

கோடைக்காலம் வந்தாலே, பலரும் நன்கு காற்றோட்டம் கிடைக்கும் படியான மிகவும் தளர்வான மற்றும் உடலின் பெரும்பாலான பகுதி வெளியே தெரியுமாறான உடையைத் தான் அணிவோம். ஆனால் இனிமேல் அப்படி சுற்றும் முன் சற்று யோசியுங்கள். ஏனெனில் சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்கள் தீங்கு விளைவிக்கக்கூடியவை. முக்கியமாக இந்த கதிர்கள் சரும புற்றுநோயை உண்டுபண்ணுபவை



கோடைக்காலத்தில் வெப்ப மண்டல நாடுகளான இந்தியா போன்ற பகுதிகள் தாங்க முடியாத அளவில் மிகவும் வெப்பமாக இருக்கும். இத்தகைய வெப்பநிலையின் போது, ஏற்கனவே உடல் மிகவும் சூடாக இருக்கும். இந்நிலையில் உடலை முழுவதும் சூழ்ந்துள்ளவாறான உடையை அணிந்தால், அதிகம் வியர்த்து அதனாலேயே பெரும் அவஸ்தைக்கு உள்ளாகக்கூடும்


இருப்பினும், கோடைக்காலத்தில் சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்கள் ஆபத்தை உண்டாக்குபவை என்பதால், வெளியே செல்லும் போது, தவறாமல் துணியால் தலையையும், கை மற்றும் கால்களுக்கு க்ளவுஸ், சாக்ஸ் போன்றவற்றை அணிந்து செல்லுங்கள். இதனால் புறஊதாக் கதிர்களின் நேரடி தாக்கத்தைத் தவிர்க்கலாம்.



சரும செல்களைத் தாக்கும் ஒரு வகையான புற்றுநோய் தான் சரும புற்றுநோய். எப்போது அசாதாரண வளர்ச்சி கொண்ட செல்கள் சரும செல்களுடன் காணப்படுகிறதோ, அது தான் சரும புற்றுநோய் ஆகும். சரும புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காமல் இருந்தால், அது உயிருக்கே பெரும் ஆபத்தாக முடியும். பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், எப்போது ஒருவரது சருமத்தின் மீது அதிகளவு சூரியக்கதிர்கள் மற்றும் புறஊதாக் கதிர்கள் சருமத்தில் படுகிறதோ, அவருக்கு சரும புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.


காலை உணவு மிகவும் முக்கியமானது. இதை ஒருபோதும் தவறக்கூடாது. காலை உணவைத் தவிர்த்தால் அல்லது ஆரோக்கியமற்ற காலை உணவுகளான மஃபின்கள், செரில்கள், சமோசா, இனிப்புக்கள் போன்றவற்றை உட்கொள்ளலால், உடல் ஆரோக்கியம் தான் மோசமாக பாதிக்கப்படும். அதிகப்படியான சர்க்கரை மற்றும் எண்ணெய் போன்றவை சரும செல்களுக்கு நல்லதல்ல. ஆரோக்கியமான உணவுகளான ஓட்ஸ் போன்றவை புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கும். முக்கியமாக சருமத்திற்கு அடியில் புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கும்

தயிரை சாப்பிடவும்

கீரைகளை சாப்பிடவும்

தக்காளியை சாப்பிடவும்

ஸ்நாக்ஸாக நட்ஸ் சாப்பிடவும்

க்ரீன் டீ குடிக்கவும்



க்ரீன் டீ குடிக்கவும் இன்று ஏராளமானோர் காபி, டீ போன்றவற்றிற்கு மாற்றாக க்ரீன் டீ குடிக்கம் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். க்ரீன் டீயில் உள் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுவதோடு, உடல் எடையையும் குறைக்கும். மேலும் இது ப்ரீ-ராடிக்கல்களால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்பைத் தடுத்து, சரும புற்றுநோய் வராமல் தடுக்கும்

:ros: :ros:
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”