முடி நரைப்பதை தடுக்க என்ன செய்யலாம்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
ரவிபாரதி
Posts: 65
Joined: Mon May 05, 2014 10:17 pm
Cash on hand: Locked

முடி நரைப்பதை தடுக்க என்ன செய்யலாம்

Post by ரவிபாரதி » Thu Jun 26, 2014 4:20 pm

முடி நரைப்பதை தடுக்க என்ன செய்யலாம்
Image
இன்றைய ஆண்களையும், பெண்களையும் பாதிக்கும் பெரும் பிரச்சனை இளம் வயதில் முடி நரைப்பது. வளர்ந்து வரும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் இதர பல காரணங்களால் இன்றைய இளைஞர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அதனாலேயே அவர்களின் தலை முடியும் வேகமாக நரைத்து விடுகிறது.

பொதுவாக அடர்த்தியான கருமையான முடி உதிர தொடங்கும் போது, மெல்லிய வெண்ணிற முடி தெளிவாக தென்பட தொடங்கும். இப்படி கொட்டும் முடி சில மாதங்களுக்கு நீடிக்கும். ஆனால் திடீரென ஒரு இரவில் கொட்டிவிடும் முடிகளால் கூட இது ஏற்படலாம். நரைப்பதற்கு கூட ஒரு அமைப்பு உள்ளது.

பெண்களுக்கு முதலில் உச்சந்தலையில் நரைக்க தொடங்கும். பின் இந்த நரை அப்படியே பிற இடங்களுக்கு பரவி, முதுமைத் தோற்றத்தைத் தரும். ஹார்மோன் சமமின்மை, கூடுதல் தைராய்டு சுரப்பிச் செயலாக்கம், தாழ் தைராய்டிசம், ஊட்டச்சத்துக் குறைவு, இரத்த சோகை, உணவுச்சத்துப் பற்றாக்குறை,

எலெக்ட்ரிக் ட்ரையர் மற்றும் கடுமையான முடி சாயம் பயன்படுத்துவது, மரபியல் சார்ந்த கோளாறு, ஹீமோதெரபி, கதிர்வீச்சு என பல காரணங்களால் இந்த பிரச்சனை உண்டாகிறது. சில நேரங்களில் 8 வயதான சிறுவர்களுக்கு கூட, லேசாக முடி நரைப்பதுண்டு. பின் அவர்கள் வளர வளர நரை முடியும் அதிகரிக்கும்.

மேலும் 25 வயதை கொண்ட பெண்கள் இந்த முடி நரைக்கும் பிரச்சனையை பற்றி அதிகமாக கவலை கொள்கிறார்கள். இளம் நரை வர இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளது. முதல் காரணம் தவறான உணவு பழக்கங்கள். உணவில் சில வைட்டமின் பி, இரும்புச்சத்து, தாமிரம் மற்றும் அயோடின் போன்றவற்றில் குறைபாடுகள் இருந்தால், இந்த பிரச்சனை ஏற்படும். இரண்டாவது மன கவலைகள்.

மன அழுத்தம் ஏற்பட்டால், தலை சருமம் கடுமையான டென்ஷனுக்கு உள்ளாகும். அது நல்ல முடி வளர்ச்சிக்கு அளித்து வரும் ஊட்டச்சத்திற்கு தடையாக நிற்கும். இதுபோக மன அழுத்தம், இரத்த சோகை, ஆரோக்கியமற்ற தலை சருமம், தலை முடியை சரிவர பராமரிக்காமல் இருப்பது மற்றும் மரபியல் பிரச்சனைகளாலும் இளநரை உண்டாகிறது.

நரைத்த முடியை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முடியாமல் போனாலும், உணவு பழக்கத்தை மாற்றி, தேவையான ஊட்டச்சத்துக்களை பெற்று, தலைமுடி மேலும் நரைக்காமல் தடுக்கலாம். இதற்கான சில வழிகளை பார்க்கலாம்.

“சீரான முறையில் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல், சரியான முடி மற்றும் தலை சரும பராமரிப்பு மற்றும் மன அழுத்தத்தை நீக்கும் நடவடிக்கைகள் என இவை அனைத்தும் அவசியம். இதற்கு தற்காலிக, பாதி நிலை மற்றும் நிரந்தர தீர்வுகள் இருக்கிறது.

முடிக்கு மருதாணி தடவினால், அது தற்காலக தீர்வாகும். சந்தையில் உள்ள ஹேர் டையை வாங்கி முடிக்கு தடவினால், அது பாதி நிலை தீர்வாக விளங்கும். அதிலும் அது அம்மோனியா கலக்காத டையாக இருக்க வேண்டும்.” தலைக்கு பிரிங்ராஜ் எண்ணெயை தடவ வேண்டும்.

மேலும் காபிக்கு பதிலாக கிரீன் டீயை பருக வேண்டும். அதேப்போல் போலிக் அமிலம் அடங்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். மேலும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டு, மன அழுத்தத்தை நீக்கி, ஒழுக்கமில்லாத வாழ்வு முறையை கைவிட வேண்டும். இவ்வாறெல்லாம் செய்தால், முடி நரைப்பதை தடுக்கலாம். மேலும் நல்ல ஆரோக்கியமான முடியையும் பெறலாம்.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”