நுரையீரல் புற்றுநோயை தவிர்க்கும் காய்கறிகள்

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
ரவிபாரதி
Posts: 65
Joined: Mon May 05, 2014 10:17 pm
Cash on hand: Locked

நுரையீரல் புற்றுநோயை தவிர்க்கும் காய்கறிகள்

Post by ரவிபாரதி » Fri Jun 06, 2014 9:20 am

நுரையீரல் புற்றுநோயை தவிர்க்கும் காய்கறிகள்

Image

காய்கறிகள் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள கொடை எனலாம். காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின், கனிம சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன. காய்கறிகளை உண்பதால் உடல் எடை அதிகரிக்காது. கலோரி அளவும் குறைவாகவே இருக்கும். பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்திலான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால் தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் தப்பிக்கலாம். இந்த வகை காய்கறிகளில் பீட்டா கரோட்டின், உடலுக்கு வைட்டமின் ஏ சத்தினை அளிக்கக்கூடிய பொருட்கள் உள்ளன. பீட்டா கரோடினானது புற்றுநோய் தடுக்கக்கூடியது. கேரட், இனிப்பு உருளைகிழங்கு, காலிப்ளவர் நூல்கோல் போன்றவை இந்த வகை காய்கறிகளில் அடங்கும்.

நெல்லிக்காய், எலுமிச்சை ஆகியவற்றில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் இவற்றை சாப்பிடுவதாலும் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம். மிளகு, முட்டைகோஸ், தக்காளி, கீரைகள் உள்ளிட்ட பயிறு வகைகள், பீட்ருட், உருளைகிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. வேறு சில காய்கறிகளில் இரும்பு சத்துகள் அதிகம் இருக்கும். இவற்றால் உடலின் ரத்தம் தூய்மையாவதுடன் உடலுக்கு தேவையான சக்தியும் கிடைக்கிறது. மிக குறைவான இரும்பு சத்து இருப்பின் அனீமியா எனப்படும். ரத்த சோகை நோய் ஏற்படும். :eyel:

பட்டாணி, கொண்டை கடலை உள்ளிட்ட பயிறு வகைகள், பீட்ருட், உருளைகிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. முட்டைகோஸ் உள்ளிட்ட கரும்பச்சை நிறத்தில் உள்ள காய்கறிகளில் அதிகளவு கால்சியமும் உள்ளதால் ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களுக்கு அவை அவசியமாகிறது. அனைத்து காய்கறிகளுமே நார்ச்சத்தினை கொண்டிருக்கின்றன. காய்கறிகள் மற்றும் பழங்களில் ஃப்ளேவனாய்ட்ஸ் காணப்படுகிறது.

மிளகாய், பூசணி, கத்தரிக்காய், கேரட், தக்காளி, செர்ரி, அனைத்து வகை வெங்காயம், பச்சை கீரைகளில் ஃப்ளேவனாய்ட்ஸ் அதிகம் உள்ளது. அதிக காய்கறிகள், பழங்கள், கீரைகள், சாப்பிடுங்கள் ஆரோக்கியமாக இருங்கள். :ros: :ros:
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”