அழகான முகத்தை பெற வேண்டுமா?

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

அழகான முகத்தை பெற வேண்டுமா?

Post by cm nair » Fri May 30, 2014 4:29 pm

ஒரேஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

* வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல், வெளியில் கருத்துப் போகாமல் இருக்கும்.

* இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம் சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்படும் தழும்பும் மறையும்.

* பப்பாளிப் பழத்தை அரைத்து சிறிதளவு தேன் , பால் சேர்த்து முகத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் முகம் பளிச்சென இருக்கும்.

* வெள்ளை முகத்தை பெற விரும்பினால், திராட்சை பழச்சாற்றை பிழிந்து எடுத்த பின் மீதம் உள்ள சக்கையை தூக்கி போடாமல் அதை முகத்தில் ஒரு மாஸ்க் போன்று பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும். திராட்சை சாற்றில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இது உங்கள் சருமத்தை சுத்திகரித்து இரத்தத்தில் உள்ள பிளேட்லட்ஸ்களை அதிகப்படுத்தி சருமம் புதிதாகவும், சுத்தமாகவும் மாற்றுகின்றது.

* ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.

* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.

* புதினாசாறு - 1 டீஸ்பூன், வறுத்து அரைத்த உளுத்தம்பொடி - 1 டீஸ்பூன், சந்தனம் - கால் டீஸ்பூன் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பருக்களின் மேல் இந்த பேஸ்ட்டைப்பூசி, உலர்ந்ததும் கழுவி வாருங்கள், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த சிகிச்சையைத் தொடர்ந்து செய்துவந்தால் பருக்கள் உதிர்ந்து, முகம் பளிங்குபோல் ஆகிவிடும்.

* உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

* ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.

* ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது - 1 டீஸ்பூன், சந்தனப் பவுடர் - 2 சிட்டிகை... இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப் போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள். இந்த சிகிச்சையால் பருக்கலாம் ஏற்பட்ட வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.

* பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

* வெளி தூசுகளால் முகம் சிலருக்கு களையிழந்து காணப்படும். அவர்களின் முகத்தில் ஒளியேற்ற இதோ ஆரஞ்சு ஃப்ருட் பேக். ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.

* ஒரு கிண்ணத்தில் அரை கப் வரும் அளவுக்கு ஸ்ட்ராபெர்ரிகளைத் துண்டுகளாக நறுக்கிப் போட்டு, அதில் ஒரு ஸ்பூன் புளித்த தயிரைச் சேர்த்து ந‌ன்றாக மசிக்கவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் அப்படியே விடவும். இந்த பேக், சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். பருக்கள் மறைந்து பளிச்சென முகம் மாறும்.

* மூன்று ஸ்ட்ராபெர்ரிப் பழங்களுடன், ஏழு ஸ்பூன் பாலைக் கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தினமும் காலையில் குளிப்பதற்கு முன்பு முகத்தில் ‘மாஸ்க்’ போல போடவும். நன்றாகக் காய்ந்ததும், முகத்தைக் கழுவவும். இதன் பிறகு எந்த க்ரீமும் பூச வேண்டிய அவசியம் இருக்காது. அந்த அளவுக்கு முகத்தில் சோர்வு, தொய்வு இல்லாமல், அந்த நாள் முழுவதும் பளிச்சென வைத்திருக்கும்.

* ஒரு கிண்ணத்தில் 2ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.

* இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும் இளமையோடு காட்சி தரும்.

* முகத்தில் கருமை படர்ந்தால் நனாரி வேர், ஆவாரம்பூ, ஆலம்பட்டை மூன்றையும் இடித்து கஷாயம் செய்து தினசரி காலை, மாலை குடித்து வந்தால் முகத்தில் படர்ந்த கருமை நிறம் மாறும்.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”