மழையிலிருந்து காக்கும் மஞ்சள்!

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

மழையிலிருந்து காக்கும் மஞ்சள்!

Post by cm nair » Wed Nov 20, 2013 7:33 pm

இரத்தத்தை சுத்தப்படுத்தவும், சருமத்தை பாதுகாக்கவும், இருமல் கபத்தை வெளிக் கொணரவும் மற்றும் தீக்காயங்கள், தட்டம்மை, சொறி சிரங்கு ஆகியவற்றில் இருந்து நிவாரணம் பெறவும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது.



கடுமையான வயிற்று போக்கு இருந்தால், மஞ்சள் தூளை மோர் அல்லது சுத்தமான குடிநீரில் கலந்து பருகினால், உடனடியாக பலன் கிடைக்கும். குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி இருந்தால், அதை ஒழிக்கவும் மஞ்சள் உதவுகிறது.



சிறிதளவு மஞ்சள் தூளுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீரில் கரைத்து, அந்த கரைசலை 20 சொட்டுகள் என்ற அளவில் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பருகினால், பூச்சித் தொல்லை ஒழியும்.



"அனீமியா" எனப்படும் ரத்த சோகை நோயை குணப்படுத்த, மஞ்சள் தூளுடன் தேன் சேர்த்து சாப்பிடலாம். தட்டம்மை நோய்க்கு, கசப்பான சுரைக்காய் இலைச் சாறுடன் சில சொட்டு தேன் மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து உட்கொள்ளலாம். நாள்பட்ட இருமல் மற்றும் தொண்டை கரகரப்பையும் இது போக்கும்.



இருமலுடன் சுவாசக் கோளாறு இருந்தால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அருந்தினால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.



சுளுக்கு ஏற்பட்டால், மஞ்சள் தூளுடன், சிறிது எலுமிச்சம் பழச்சாறு மற்றும் உப்பு சேர்த்து, அந்தக் கலவையை சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவினால், விரைவில் குணம் அடையலாம்.



மஞ்சளின் மகத்துவத்தை உணர்ந்து, நமது முன்னோர்கள் அதை நெடுங்காலமாக பயன்படுத்தி வருகின்றனர்.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”