நண்பர்களே என் ஊர் அறிமுகம்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
User avatar
mathiworld
Posts: 78
Joined: Thu Dec 20, 2012 9:28 am
Cash on hand: Locked

நண்பர்களே என் ஊர் அறிமுகம்

Post by mathiworld » Sat Sep 28, 2013 11:00 pm

வாருங்கள் நண்பர்களே உங்களை எனது ஊருக்கு அழைத்து போகிறேன். எனது ஊர் வடலூர் மிகவும் அழகு என்று சொல்ல முடியாது அனால் பெருமை வாய்ந்த ஊர். ஏன் என்று கேட்பது எனக்கு புரிகிறது. சொல்கிறேன். நீங்கள் அனைவரும் அறிந்திருக்கும் ஒரு மகான் வாழ்ந்த ஊர் அது. நீங்கள் யார் என்று கேட்கும் முன்பு நானே கூறிவிடுகிறேன். வாடிய பயிர்களை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறியவர். வள்ளலார் என்று அழைக்க படும் இராமலிங்க அடிகள் அவர்கள்.
தமிழ் நாடு மட்டும் இன்றி உலக மக்களாலும் அறிய பட்டவர். இறைவனை ஜோதி வடிவமாக கண்டவர். அவரது மகா மந்திரம் அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்சோதி. அவர் கூறியவற்றில் ஒன்று

"சடங்குகள் என்னும் சகதிக்குள் சிக்கி அடங்குவது சன்மார்க்கம் அன்று--திடங்கொண்டு வெற்று வழிபாட்டை வீணென்று தள்ளிடக் கற்றலே சன்மார்க்கம் காண்"

இப்படி அவரை பற்றி சொல்லி கொண்டே போகலாம் ஆனால் மத்த சில செய்திகளை சொல்கிறேன்.
என் ஊரில் இருந்து 25கி.மீ தொலைவில் தன் சிதம்பரம் உள்ளது இது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தன். இது நடராஜர் வசிக்கும் ஒரு பிரசித்திபெற்ற கோவில் உள்ளது. அடுத்து நெய்வேலி, இங்கு திறந்தவெளி பழுப்பு நிலகரி சுரங்கம் உள்ளது. இங்கு அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பிற மாநிலங்களுக்கு அனுப்ப படுகின்றன. இப்படி இன்னும் சொல்லி கொண்டே போகலாம். இன்னும் பல செய்திகளை அடுத்து அடுத்து சொல்கிறேன்.

நன்றி
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”