மூணாறு - குட்டி கொடைக்கானல்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

மூணாறு - குட்டி கொடைக்கானல்

Post by cm nair » Tue Sep 17, 2013 12:30 pm

தமிழகமும், கேரளமும் கைகோக்கும் இயற்கை தொட்டில் தான் மேற்கு தொடர்ச்சி மலை. இம்மலையில் பசுமை கிரீடம் சூட்டப்பட்டது போல் அமைந்த தேயிலை செடிகள் நிறைந்த பகுதி தான் மூணாறு.
உலக பிரசித்த பெற்ற சுற்றுலா இடமான மூணாறு பகுதியில் பலரும் பார்த்திராத புதுமையான மிகப் பழமையான பெருமைக்குரிய இடம் தான் டாப் ஸ்டேஷன். செல்லமாக குட்டி கொடைக்கானல் என்றழைக்கிறார்கள். இந்த குட்டி கொடைக்கானல் டாப் ஸ்டேஷன் அமைந்துள்ள பகுதி தமிழகத்தின் தேனி மாவட்டம் கொட்டகுடி பஞ்சாயத்தை சேர்ந்தது. உலகத்தரத்தில் தேயிலை விளையும் இடமும் டாப் ஸ்டேஷன் தான்.

தேனியிலிருந்து போடி வழியாக போடிமெட்டு மலைச்சாலையில் பயணித்தால் மூணாறு வரும். போடி மெட்டு ரோடு ரெங்கநாதர் பள்ளி கொண்டிருக்கும் பாம்பின் அடுக்கு போல் அடுக்கடுக்காய் தெரியும்.
போகும் வழியில் புலியருவி. அடுத்து போடிமெட்டு இது தான். இரு மாநில எல்லை பகுதி.

போடியிலிருந்து மூணாறு செல்லும் வரை 70கி.மீ. தூரமும் பசுமை, பசுமை.., பசுமை...., காடுகள், மலைகள், தேவன் ஆட்சி என்பது இது தான். போகும் வழியிலே சின்னக்கானல் ஆனை இரங்கல், டேம் வியூ கண்கொள்ளாக் காட்சி. மலைகளோடு கொஞ்சும் மேகக்கூட்டமும், மலைகளை சுற்றிலும் காலைச்சுற்றிய வெள்ளிக் ö காலுசாய் நீர்ப்பரப்பும் கரைகளாய் நாலாபுறமும் தேயிலை தோட்டங்களும், மரங்களும், கண்களை கவரும் ரம்மியமான இடங்கள், பூம்பாறை, கேப்ரோடு, பவர்ஹவுஸ் பால்ஸ் என போகும் வழியெங்கும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள். மூணாறு டூ டாப் ஸ்டேஷன் 35 கி.மீ. தூரம் போகும் வழியில் தான் குண்டலை, மாட்டுப்பட்டி டேம்கள், போட்டிங்க போக ஏற்ற இடங்கள்.
டாப் ஸ்டேஷன் மிக அமைதியான மலைக்கிராம பகுதி. இங்கிருந்து பார்த்தால் தமிழகத்தில் குரங்கணி, கொழுக்குமலை, முந்தல், கொட்டக்குடி, சென்ட்ரல் ஸ்டேஷன் வியூ தெரியும். டெலஸ் கோப் வியூ பாய்ண்ட் இங்குள்ளது.

மூணாறுக்கு மக்கள் தேயிலை தோட்டத்தொழிலாளர்களாக நடந்தே வந்து போன இடம் தான் டாப் ஸ்டேஷன், தேயதலை, காப்பி, மிளகு என மலைப்பயிர்களின் விளை பொருட்கள் இங்கிருந்து ரோப் கார் வழியாக போடி ரயில்வே ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டன. அந்த ரோப் கார் ஸ்டேஷன் அமைந்த இடம் தான். இந்த டாப் ஸ்டேஷன் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் மலைக்கள்ளன் படமும், சமீபத்தில் எடுக்கப்பட்ட மைனாவும், கும்கியும் அழகர்சாமி குதிரையும் எடுக்கப்பட்ட இடம் இந்த டாப் ஸ்டேஷன் தான்.

மூலிகைகள், அருவிகள் நிறைந்த இம் மலைப்பகுதிக்கு வெளிநாட்டு பயணிகள் டிரக்கிங் வருகிறார்கள். இங்கு திடீர் சாரல் மழையும் எப்போதுமே நல்ல குளிரும் இருப்பதால் இப்பகுதி மக்கள் இதை குட்டி கொடைக்கானல் என்கிறார்கள்.
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”