பிறந்த மண்ணின் மண்வாசனையும்,வீரமும்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
stalink
Posts: 89
Joined: Mon Aug 12, 2013 9:51 am
Cash on hand: Locked

பிறந்த மண்ணின் மண்வாசனையும்,வீரமும்

Post by stalink » Fri Aug 23, 2013 12:26 am

என் அன்புடைய சகோதர,சகோரிகளுக்கு வணக்கம்.

என்னைப் பற்றி அறிந்து கொள்ள என் அன்புடைய சகோதர,சகோரிகள் எல்லாம் மிகுந்த ஆர்வமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து என் பிறந்த ஊரை நம் படுகை குடும்பத்தோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நான் பிறந்து வளர்ந்த ஊர் வடுவூர்.வடுவூர் இப்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது.தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ள வடுவூரைச் சுற்றி இருக்கும் எடமேலையூர், வடுவூர் வடபாதி, வடுவூர் தென் பாதி, வடுவூர் அக்ரஹாரம், கட்டக்குடி, பேரையூர் உள்பட 15 கிராமங்களில் ஊர்களின் பெயருக்கு முன்னால் வடுவூர் சேர்த்துச் சொல்வதுதான் வழக்கம்.வடுவூர் இரண்டு மூன்று விஷயங்களுக்குப் பிரபலம், பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட வடுவூரின் ஏரி, வடுவூரில் உள்ள ராமர் சிலை அப்புறம் கபடி விளையாட்டு.

மேலும் எனது ஊரை விளையாட்டு வீரர்களின் சொர்க்கபுரி என்று தான் கூறுவேன்.எங்கள் கிராமத்தில் கிட்டத்தட்ட வீட்டுக்கு ஒருவர் 'ஸ்போர்ட்ஸ் கோட்டா’வில் அரசு வேலை பெற்றிருக்கிறார்கள்.மேலும் ரூ. 6 கோடி யில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதியும் வழங்கியுள்ளது.இந்த விளையாட்டு அரங்கத்தில் சுமார் ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க முடியும். இதில் கைப்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து, டேபிள்டென்னிஸ், கபடி, சதுரங்கம், கேரம் ஆகிய விளையாட்டுகள் விளையாடும் படி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. மேலும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அறை, அலுவலக அறை, செய்தியாளர்கள் சந்திப்பு அறை, குளியல் அறை, கழிவறை, வாகன நிறுத்துமிடங்கள் ஆகிய வசதிகளுடன் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரி நீடாமங்கலம் வடுவூர் ஏரியாகும். கரிகால சோழன் காலத்தின் பெருமையை கூறும் வரலாற்று சான்றாக இந்த ஏரி உள்ளது. முற்கால சோழப் பேரரசுக்கு வித்திட்ட கரிகாலச் சோழன் ஆட்சிப் பொறுப்பு ஏற்கும் முன் மிகப்பெரிய போர் நீடாமங்கலம் அருகே உள்ள கோவில்வெண்ணியில்தான் நடைபெற்றது.அப்போது சேர, பாண்டிய, பல்லவ சாணக்கிய கனப்பிரர், குறு நில மன்னர்கள் ஒன்று சேர்ந்து கரிகால சோழனை எதிர்த்து நடைபெற்ற போரில் வீரம் செறிந்த வீரர்களின் காயங்களின் புண்ணிற்கு வைத்தியம் பார்த்த இடமே வடுவூர்.

புண்கள் ஆறினாலும், காயங்களால் உண்டான வடு மாறாத வீரர்கள் சிகிச்சை பெற்றதால் வடுவூர் என்று அழைக்கப்படும் பெருமைக்குரியதே வடுவூர் என்ற செவி வழி செய்தி. வடுவூர் வரலாற்று சிறப்பு மிக்க ஊராகும். குடிநீர் தேவைக்காக சோழர் காலத்தில் வடுவூர் ஏரி அமைக்கப்பட்டது. சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட வடுவூர் ஏரியின் பரப்பளவு எல்லை தற்போது சுருங்கி 356 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக வனத்துறையின் பராமரிப்பில் உள்ளது. பறவைகள் சரணாலயம் என்ற தகுதியுடையதாக இந்த ஏரி உள்ளது.

இங்கு கொக்கு, கறுப்பு மடையான், செந்நிற கொக்கு, பூ நாரை, நீர்க் கோழி உட்பட 15 -க்கும் மேற்பட்ட ப்றவைகள் வாழ்விடமாக எங்கள் ஊர் அமைந்துள்ளது.வடுவூர் ஏரி வறண்டதால் இங்கிருந்த பறவைகளும் வேறு இடத்திற்கு சென்று விட்டது என்பதை நினைக்கும் போது நான் மிகுந்த வருத்தம் அடைந்தேன்.ஆனால் தற்போது தண்ணிர் வந்துவிட்டதால் மீண்டும் இவைகள் எங்கள் ஏரியை பூத்து குலுங்க வைக்க வர தொடங்கியுள்ளன்.இதனால் ஏரித்தண்ணீர் பாயும் பச்சை நெல்வயல்களுக்கெல்லாம் இலவசமாக உரம் சப்ளை செய்வது எங்களின் விருந்தாளிப்பறவைகள் தான்.

ஒரு காலத்தில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு பாசன வசதி கொடுத்த வடுவூர் ஏரி தற்சமயம் 2100 ஏக்கர் பரப்பளவிற்கு மட்டுமே பாசன வசதி கொடுக்கிறது என்றாலும் தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்தில் வடூவூர் ஏரி அமைந்துள்ளது என்று நினைக்கும் போது நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.மேலும் வடூவூர் ஏரியின் பயனாக எடமேலையூர், வடுவூர் வடபாதி, வடுவூர் தென் பாதி, வடுவூர் அக்ரஹாரம், கட்டக்குடி, பேரையூர் உள்பட 15 கிராமங்களில் சாகுபடி செய்து நன்மை அடைந்துவருகிறோம்.

எங்கள் கிராமம் அனைத்து அடிப்படை வசதிகள் கொண்டுள்ளது.ஏன் என்றால் இங்கு Gentral Hospital,Telephone Exchange,Library, Electricity Board, Veterinary Hospital, Post Office,Indian Bank,ஆறுகள்,குளங்கள்,1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான கல்விக் கூடம் அமைந்துள்ளது.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணின் மண்வாசனையும்,வீரமும்

Post by ஆதித்தன் » Fri Aug 23, 2013 12:35 am

:great:

கூடிய சீக்கிரத்தில வடுவூர்ல ஒர் காலேஜையும் ஒபன் செய்திடுங்க .... :ro:
stalink
Posts: 89
Joined: Mon Aug 12, 2013 9:51 am
Cash on hand: Locked

Re: பிறந்த மண்ணின் மண்வாசனையும்,வீரமும்

Post by stalink » Fri Aug 23, 2013 1:26 am

ஆதி சார்...

பிறந்த மண்ணின் மண்வாசனையும்,வீரமும் என்ற தலைபில் வந்த பகுதியை பார்த்தற்க்கு மிகவும் நன்றி.

:thanks:
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”