எங்க ஊரு நாமக்கல்-ங்க

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
easysp
Posts: 9
Joined: Thu Aug 08, 2013 3:56 pm
Cash on hand: Locked

எங்க ஊரு நாமக்கல்-ங்க

Post by easysp » Sat Aug 10, 2013 10:20 pm

எங்க ஊரு நாமக்கல்-ங்க
எங்க ஊர பத்தி சொல்ல நிறைய்ய விசயம் இருக்குங்க
எங்க ஊர்ல கோழி பண்ணை அதிகம்.லாரி தொழிலும் மிக பிரபலம்.அதிலும் ரிக் வண்டி அதாங்க போர் போடுற வண்டி இங்க தாங்க அதிகம்.இந்தியா முழுசும் நம்ம ஊர் வண்டி தாங்க ஓடிக்கிட்டிருக்கு.
அப்புறம் விசைத்தறி யும் இங்க அதிகம்.கல்வி யில பாத்தீங்கன்னா எங்க ஊர்ல தான் காலேஜ் அதிகம் இருக்கு.10 வது 12 வது படிக்கிற புள்ளைங்க கூட நம்ம ஊர் காரங்க தான் மாநில அளவில் முதல் மார்க் எல்லாம் எடுக்குறாங்க.பல ஊர்ல இருந்தெல்லாம் இங்க படிக்க வர்றாங்க.நாமக்கல்ல இன்னும் ஒரு சிறப்பு ஆஞ்சநேயர் கோவில்.இந்த நாமக்கல் மலை வந்து ஒரே கல்லாக இருக்கு.அப்புறம் திருச்செங்கோடு மலை யும் சிறப்பு வாய்ந்தது தான்.மலை மேல் இருக்கிற அர்த்தனாரீஸ்வரர் தமிழ் நாட்டுலயே இங்க மட்டும் தான்னு சொல்றாங்க.எனக்கு தெரிஞ்ச விசயத்த சொல்லியிருக்கேன்.தப்பு இருந்தா சொல்லுங்க திருத்திருவோம்.தெரிஞ்சிக்குவோம்.
அன்புடன் சிவா
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”