இலங்கை பற்றிய தகவல்கள்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

இலங்கை பற்றிய தகவல்கள்

Post by mubee » Mon Aug 05, 2013 11:46 am

நாட்டின்- பெயர் : நீண்ட பெயர் : இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
ஏற்றுக்கொள்ளப்பட்ட குறுகிய பெயர்- இலங்கை
முந்திய பெயர் :----== இலங்கை
அளவு : பரப்பளவு :-----==00சதுர கிலோ மீற்றர்
நீளம் : 445 கிலோ மீற்றர்
அகலம் : 225 கிலோ மீற்றர்
தலைநகரம் : ஸ்ரீ ஜயவர்தனபுர
வணிகத் தலைநகரம் : கொழும்பு
அரசாங்கம் : இலங்கையானது ( 2004 மதிப்பீட்டின்படி ) 19.5 மில்லியன் மக்களைக் கொண்ட சுதந்திரமும் தன்னாதிக்கமும் உடைய நாடாகும். விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் சர்வசன வாக்குரிமையின் மூலமாகத் தெரிவுசெய்யப்படுகின்ற பாராளுமன்றத்தினால் சட்டவாக்க அதிகாரம் பிரயோகிக்கப்படுகின்றது. பொதுமக்களாலேயே தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதி பாதுகாப்பினை உள்ளிட்ட நிறைவேற்று அதிகாரத்தை அமுலாக்கி வருகின்றார். பலகட்சிமுறை நிலவுகின்ற இலங்கை மக்கள் ஆறு வருடங்களுக்கு ஒருதடவை புதிய அரசாங்கமொன்றைத் தெரிவு செய்வதற்காக வாக்களிக்கின்றனர்.
சனத்தொகை : 20.3 மில்லியன் ஆகும்
சனத்தொகை அடர்த்தி : சதுர கிலோ மீற்றருக்கு 296 பேர்
ஆயுள் எதிர்பார்ப்பு : பெண்கள் 76.4 ஆண்கள் 71.7 (2001 மதிப்பீட்டின் பிரகாரம்)
எழுத்தறிவு விகிதம் : 92.7 சதவீதம் (2003 மதிப்பீட்டின் பிரகாரம்)
மொழிகள் : சிங்களம், தமிழ் ஆகிய மொழிகள் இலங்கையில் பரவலாகப் பாவனையில் உள்ளது.
இனப்பிரிவுக் கலப்பு : சிங்களவர் 74.9%. தமிழர் 15.4%. முஸ்லிம்கள் 9.2%, பறங்கியரும். (ஒல்லாந்த மற்றும் போர்த்துக்கேய வழித்தோன்றல்கள்) பிற இனத்தவர்களும் 0.5% . (2012 மதிப்பீட்டின் பிரகாரம்)
மதம் : பௌத்தம் 70.19 %, இந்து 12.61%, கிறிஸ்தவம் 7.45%, இஸ்லாம் 9.71%
காலநிலை : தாழ்நிலப் பிரதேசங்கள் - வெப்ப வலயத்தைச் சேர்ந்தவை சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆகும். மத்திய மலைநாடு –மிகவும் குளிரானது. வெப்பநிலை 14 பாகை செல்சியஸ் வரை வீழ்ச்சியடையும். தென்மேல் பருவக்காற்று மழை மே முதல் யூலை வரை மேற்கு, தெற்கு மற்றும் மத்திய பிரதேசங்களுக்கு கிடைக்கும். வட கீழ் பருவக்காற்று மழை டிசெம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வடக்கு – கிழக்குப் பிரதேசங்களுக்கு கிடைக்கும். உல்லாசப் பயணிகளின் மனதைக் கவரக்கூடிய காலநிலை ஆண்டுபூராவிலும் நிலவுகின்றமை இலங்கையின் தனித்துவமான பண்பாகும்.
வருடாந்த தலா வருமானம் GNP : 2580 அமெரிக்க டொலர்கள் (2011 மதிப்பீட்டின் படி)
கைத்தொழில்கள் : Pஇறப்பர், தேயிலை, தெங்கு மற்றும் வேறு விவசாயப் பொருட்களைப் பதனிடல், ஆடை தயாரிப்பு, சீமெந்து, பெற்றோலிய சுத்திகரிப்பு, துணிமணிகள் மற்றும் புகையிலை.
விவசாய உற்பத்திகள் : அரிசி, கரும்பு, தானிய வகைகள், அவரையினத் தாவரங்கள், எண்ணெய் தயாரிக்கும் விதையினங்கள், கிழங்கு வகைகள், பலசரக்கு சாமான்கள், தேயிலை, இறப்பர், தேங்காய், பால், முட்டை, தோல், இறைச்சி.
புழக்கத்திலுள்ள பணம் : தசம பண முறை கடைப்பிடிக்கப்படகின்ற இலங்கையில் ரூபா 2,10,20,50,100,200,500,1000 மற்றும் 2000 பெறுமதியான தாள்கள் பாவிக்கப்படுகின்றன. 1,2,5,10,25,50 சத நாணயக் குற்றிகளும் ரூபா 1,2,5,10 பெறுமதியான நாணயக் குற்றிகளும் உள்ளன. சர்வதேச ரீதியாக பணத்தின் பெறுமதி கணிப்பிடப்படுகையில் டொலர் அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றது.
விசா அனுமதிப் பத்திரம் : உங்கள் நாட்டின் இலங்கைத் தூதரகத்திடமிருந்து, கொன்சியுலேற் அலுவலகத்திடமிருந்து, சுற்றுலாத்துறை அலுவலகத்திடமிருந்து அல்லது உங்ளின் உல்லாசப் பயணத்துறை முகவரிடம் விசாரிக்கவும்.
வாரத்தின் வேலை நாட்கள் : திங்கள் முதல் வெள்ளி வரையான ஐந்து நாட்களைக் கொண்ட வாரமே இலங்கையில் நடைமுறையில் உள்ளது.
அலுவலக நேரங்கள் : அரசாங்க அலுவலகங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப. 8.30 முதல் பி.ப. 4.15 வரை திறந்திருக்கும்.
வங்கிகள் : திங்கள் முதல் சனி வரை மு.ப. 9.00 மணி முதல் பி.ப.1.00 மணி வரை அல்லது பி.ப. 3.00 மணி வரை திறந்திருக்கும்.
அஞ்சல் அலுவலகங்கள் : திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரையும் சனிக்கிழமைகளில் மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 1.00 மணி வரையும் திறந்திருக்கும். மத்திய தபால் பரிவர்த்தனை நிலையம் கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ளது. 24 மணிநேரமும் திறந்திருக்கும் ( தொலை பேசி – 2326203 )
இடஅமைவு : இந்து சமுத்திரத்தில் மத்திய கோட்டிலிருந்து 880 கிலோ மீற்றர் வடக்கில் இந்தியாவின் தென்கிழக்கு கரையோரத்திற்குத் தொலைவில் அமைந்துள்ள தீவாகும். அது மத்திய கோட்டிற்கு வடக்கே 5° 55' மற்றும் 9° 55' இடையேயும், கிழக்கு நிலநடுக்கக் கோட்டிற்கு 79° 42' மற்றும் 81° 52' இடையேயும் அமைந்துள்ளது.
சிறப்பம்சம் : அழகான வறள் வலய கடற்கரை, கண்கவர் விருட்சங்கள், புராதன தாதுகோபுரங்கள் போன்றன காணப்படுவதுடன் அனைவரும் விரும்பத்தக்க அழகான கண்கவர் காட்சிகளால் நிரம்பி வடிகின்றன. நாட்டிலே புவிசரித்திரவியல் மாற்றங்கள், மத்திய மலை நாட்டிலிருந்து ஓரளவு தெற்கே, 2500 மீட்டரை விடவும் உயரமான பல மலைத் தொடர்கள், அதைச் சுற்றியுள்ள சமவெளிகள் என்பவற்றையும் கொண்டுள்ளது. தென்னை மரங்கள் நிரம்பிய கடற்கரையால் சூழ்ந்து காணப்படுகின்ற இந்தத் தீவிலே கடல் வெப்ப நிலையானது 27° பாகை செல்சியஸ்ஸை விடவும் குறைவது சில சமயங்களிலாகும்.
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”