Page 1 of 1

2nd Demo Works : “ நான் பிறந்த ஊர்”

Posted: Sat Mar 10, 2012 8:00 am
by ஆதித்தன்
நான் பிறந்த ஊர்

முதல் பயிற்சிப் பணியினை செய்துவிட்டீர்களா, சரி. இப்பொழுது இரண்டாம் பணிக்குப் போகலாம்.

( தயவு செய்து முதல் பணியை முடிக்காவிட்டால், சென்று செய்து முடித்துவிட்டு வரவும் > Click viewtopic.php?f=27&t=52 )


சரி, நாம் இரண்டாவது பணிக்குப் போகலாமா!!!

முதல் பணியில் உங்களை அறிமுகம் செய்தீர்கள், இரண்டாவது பணியில் நீங்கள் பிறந்த ஊர் பற்றி ஏதேனும் பத்து வரிகளில் எழுதப் போகிறீங்க அவ்வளதான்.

கீழ் கொடுத்துள்ள ”பணி 2-Click” பண்ணுங்க ... பணி ஒன்றில் செய்தது போன்று Subject Line and Message Box தெரியும். அதுல நீங்க ,

Subject : நண்பர்களே என் ஊர் அறிமுகம் / hi என் ஊரைப் பற்றி சொல்லட்டுமா / நான் எங்க பிறந்தேன் தெரியுமா / My Birth place / Welcome to my native / more

இப்படி ஏதேனும் ஒன்றை நீங்களே போட்டுக்கங்க.

அடுத்து Message Box: இதுல தான் உங்க ஊர் பற்றிய அறிமுகத்தை கொஞ்சம் ஸ்டைலா எல்லோரும் படிக்கிற மாதிரி எழுத வேண்டும். குறைந்தப்பற்றம் பத்து வரி கொண்டு எழுதினால் சிறப்பாக அமையும். பத்துவரி என்பதற்காக பயப்படாதீர்கள், நம்ம ஊரைப் பற்றி கேட்டால் சொல்வதற்கு என்ன? சும்மா நார்மலாக, உள்ளவற்றை அப்படியே எழுதினால் போதும்.

எடுத்துக் காட்டாக - என்னுடைய பதிவான ”பிறந்த மண்ணும் - பிரியாத மனமும்...” படிங்க Click



சரி, இப்பொழுது உங்க வேலைய தொடங்கலாமா>

இதோ கீழே சொடுக்கி உங்களது ஊர் அறிமுகத்தை பதியவும்.
பணி 2-Click - ”பிறந்த ஊர் பற்றி”


முதலில் இந்த பணியை எழுதி முடிக்கவும், பின் அடுத்த பணியினை தொடரலாம். ஒன்றும் அவசரம் இல்லை.

நன்றி.
:thanks:

Re: 2nd Demo Works : “ நான் பிறந்த ஊர்”

Posted: Tue Jul 31, 2012 10:45 am
by kumarp
நான் பிறந்த ஊர் வெள்ளகோவில். எங்கள் ஊர் தேசிய நெடுஞ்சாலையில்(எண்64) உள்ளது, எங்கள் ஊர் ஜவுளி உற்பத்தியில் முக்கிய இடமாக உள்ளது.

Re: 2nd Demo Works : “ நான் பிறந்த ஊர்”

Posted: Sat Aug 17, 2013 6:43 pm
by a.fathima
என்னுடைய 2வது டெமோ
நான் பிறந்த ஊர் கேரளம் மிகவும் அழகிய ஊர் ஆனால் தமிழகத்தில் வந்தால் தான் அறிவு கற்று கொள்ள வசதி
Image

Re: 2nd Demo Works : “ நான் பிறந்த ஊர்”

Posted: Sat Mar 01, 2014 1:51 pm
by thilak
வணக்கம் என் இனிய குடும்பங்களே!

எனது ஊரான வாலசமுத்திரம் தூத்துக்குடி - கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மிக சிறிய கிராமம். அடிப்படை வசதிகள் ஒன்றும் கிடையாது. அதனால் என் ஊர் மக்கள்
தூத்துக்குடிக்கு குடி பெயர்ந்ததால் எனது ஊரில் வீடுகள் இடிந்து பாழடைந்து குழந்தைகளின் பள்ளிக்காக அருகில் உள்ள நகரமான தூத்துக்குடிக்கு குடி பெயர்ந்ததால் எனது ஊர் களை இழந்து உள்ளது. ஆனாலும் எனது ஊர் மக்கள் எங்கு எந்த விசேஷங்கள் நடந்தாலும் சொந்த ஊருக்கு வந்து ஒன்று கூடி செய்து முடிப்பார்கள். எனது ஊரில் கோவில்கள் நல்ல முறையில் இயங்கவில்லை. இதுவே எனது ஊருக்கு நடக்கும் ஒரே வருத்தமான விஷயம். மற்றபடி எனது ஊரும் எனது ஊர் மக்களும் ஒற்றுமையாக இருப்பார்கள்.
:thanks:

Re: 2nd Demo Works : “ நான் பிறந்த ஊர்”

Posted: Sun Sep 28, 2014 11:00 pm
by LAKSHMI1964
வணக்கம் எனதருமை படுகை நண்பர்களே,
நான் பிறந்து வளர்ந்தது சென்னை பெரம்பூர்...
சென்னையை பற்றி எல்லோருக்கும் தெரியும்..
பெரம்பூர் என்றாலே ரயில்பெட்டி தொழிற்சாலையும்..தென்னிந்திய ரயில்வேயும் தான்
ராகவன்

Re: 2nd Demo Works : “ நான் பிறந்த ஊர்”

Posted: Thu Jul 02, 2015 7:19 pm
by KVelmurugan
i am thirumangalan madurai (dt)