நான் பிறந்த ஊர்...

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
விமந்தனி
Posts: 197
Joined: Tue May 14, 2013 11:45 pm
Cash on hand: Locked

நான் பிறந்த ஊர்...

Post by விமந்தனி » Fri Jun 07, 2013 12:37 am

என்னோட ஊர் சென்னை தாங்க ஆனா, பிறந்த ஊரைப்பற்றி அல்லவா சொல்லச்சொல்கிறார்கள்.
நான் பிறந்த ஊர் சென்னைக்கு அடுத்தபடியாக second city என்றழைக்கப்படும் வெயில் நகரமான வேலூர் CMC. நான் சென்னையில் தான் பிறக்கவேண்டும் என்று ஆசை(!)பட்டேன். என்ன செய்வது, நான் தான் என் அம்மாவுக்கு முதல் குழந்தையாதலால் தலை பிரசவம் தாய்வீட்டில் என்பதால் என்னுடைய entry வேலூரில் நிகழ்ந்தது.

என் பாட்டி வீடு வேலூரும் அல்ல ஆற்காட்டிலிருந்து 12 km தூரத்தில் ஆரணி போகும் வழியில் உள்ள சின்ன ஊர் திமிரி.அந்த சின்ன ஊரில் மருத்தவ வசதி இல்லாததால் தான் இந்த வேலூர் விஜயம்.

இந்த ஊருக்கு ஒரு விசேஷம் உண்டு தெரியுமா?
இது கீரிடம் வாங்கிய ஊராம். என் தாத்தா சொன்னதாக என் அம்மா சொல்வார்.
என்ன புரியவில்லையா?

ஊறின் பெயரை மறுபடியும் பாருங்கள்.

தி மி ரி - ஒவ்வோர் எழுத்திற்கும் "இ" குறில் இணைந்துள்ளதை பாருங்கள். இதுவே அந்த ஊரின் சிறப்பு. வேறு எந்த ஊருக்கும் இல்லாத சிறப்பு.

ஆம்! ஊரின் சிறப்பு அதன் பெயரிலேயே உள்ளது.

குறிப்பு: பதிவிடும் பணியை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. படுகையில் தான் முதன் முதலாக பதிவிட ஆரம்பித்திருக்கிறேன். ஆகவே, என் பதிவுகளில் ஏதேனும் குறையிருப்பின் Seniors Please மன்னிக்கவும். குறையினை சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன்.
Last edited by விமந்தனி on Sat Jun 08, 2013 10:46 pm, edited 1 time in total.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நான் பிறந்த ஊர்...

Post by ஆதித்தன் » Fri Jun 07, 2013 1:26 am

விமந்தனி அம்மா, விமந்தனி ஆசையை எல்லாம் சொல்லும் போது.... அப்படியே பத்து மாதமும் ரொம்ப ரொம்ப ஓன்றிவிட்டார்கள் என்று தெரிகிறது...
சரியா???

இருந்தாலும், பிறந்த ஊர் என்றாலும் நாம் விவரம் அறிந்து வளரும் ஊரின் பெருமையைத்தான் எல்லோரும் சொல்வோம். அது பெரும்பாலும் எல்லோர்க்கும் தாம் தம் ஊரில் வளர்வதால் பிரச்சனை இல்லை.

ஆனால் தற்போது பலர் தங்களுடைய ஊர் என்று சொல்லிக் கொள்ள உரிமை கொண்ட ஊர் கிராமமாக ஏங்கோ இருக்க... பிறந்து வளரும் சென்னையைத்தான் எங்க ஊர் என்று சொல்லும் சூழல் வந்து கொண்டிருக்கிறது...

இதுல நீங்க எந்த ரகம்?
mnsmani
Posts: 492
Joined: Tue Mar 06, 2012 9:48 pm
Cash on hand: Locked

Re: நான் பிறந்த ஊர்...

Post by mnsmani » Fri Jun 07, 2013 8:40 am

விமந்தனி wrote:குறிப்பு: பதிவிடும் பணியை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. படுகையில் தான் முதன் முதலாக பதிவிட ஆரம்பித்திருக்கிறேன். ஆகவே, என் பதிவுகளில் ஏதேனும் குறையிருப்பின் Seniors Please மன்னிக்கவும். குறையினை சுட்டிக்காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன்.
எனக்கும் ஆரம்பத்தில் தமிழில் எழுதுவது சற்று கடினமான்கதான் இருந்தது, பின்னர் படுகையை கண்டு, NHM tamil writer download செய்து சற்று சிரமத்துடன் டைப் செய்ய ஆரம்பித்தேன், இப்போது மிக சுலபமாகவும், விரைவாகவும் தமிழில் டைப் செய்ய முடிகிறது. ஆரம்பத்தில் எனக்கு எழுத்து கோர்வையில் பிழை அதிகம் இருந்தது. ன்,ண்,ல்,ள்,ர்,ற் என்று எங்கு எதை போட வேண்டும் என்று தெரியாது. அப்போதெல்லாம் ராம்குமார் என்ற படுகை நன்பர் இதை எல்லாம் கவனித்து திருத்துவார். பின்னர் நான் டைப் செய்ய போகும் தமிழ் வார்த்தைக்கு ஆங்கில சொல் கொடுத்து Google Translaterல் கொடுத்து சரியான வார்த்தையை கண்டு எழுதி வருகிறேன். இதனால் நேரம் சற்று அதிகமானாலும் நமது தாய் மொழியை நாமே கொலை செய்த பாவத்துக்கு ஆளாகவேண்டாமே என்ற நற் சிந்தனைதான். அதனால் தைரியமாக எழுதுங்கள் எழுத எழுத தான் எழுத்து நம்வசப்படும்.
நன்றி.
விமந்தனி
Posts: 197
Joined: Tue May 14, 2013 11:45 pm
Cash on hand: Locked

Re: நான் பிறந்த ஊர்...

Post by விமந்தனி » Sat Jun 08, 2013 10:55 pm

ஆதித்தன் wrote:
விமந்தனி அம்மா, விமந்தனி ஆசையை எல்லாம் சொல்லும் போது.... அப்படியே பத்து மாதமும் ரொம்ப ரொம்ப ஒன்றிவிட்டார்கள் என்று தெரிகிறது...
ஆதி sir, உங்களுக்காகவே "நான் பிறந்த ஊர்.." edit செய்துள்ளேன். இப்போது புரியும் என்று நினைக்கிறேன்.
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: நான் பிறந்த ஊர்...

Post by ஆதித்தன் » Sun Jun 09, 2013 2:59 am

:mudi: :mudi: :mudi:

உண்மையாலுமே முடியல....

குழப்பவாதியான என்னையே ரொம்ப குழப்பிட்டீங்க...
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”