நண்பர்களே என் ஊர் அறிமுகம்
-
- Posts: 3
- Joined: Tue Apr 30, 2013 3:39 pm
- Cash on hand: Locked
நண்பர்களே என் ஊர் அறிமுகம்
பொள்ளாச்சி இதமாக வீசும் மலைக்காற்று, பழகுவதற்கு இனிய மனிதர்கள், சுவையான குடிநீர், சத்தான இளநீர், நிறைய கல்வி நிலையங்கள், பக்கத்திலேயே இருக்கும் தொழில் நகரமான கோவையில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள், ஆசுவாசப்படுத்திக் கொள்ள அருகருகே இருக்கும் ஆனைமலை, வால்பாறை என பொள்ளாச்சியை பற்றி நிறைய சொல்லலாம். இந்த ஊரை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு எந்த ஊரும் இனிப்பானதாக இருக்காது என்று சொல்கிறார்கள். ஒரே ஒரு நாள் தங்கினாலே போதும், இது நூற்றுக்கு நூறு உண்மை என்பது புரியும். பொள்ளாச்சி சந்தை தமிழகத்தி லேயே மிகப் பிரபலம். காய்கறி முதல் கருவாடு வரை இங்கே விற்காத சமாசாரமே இல்லை. வாரச் சந்தை கூடும் நாட்களில் வியாபாரம் ஒவ்வொரு கடையிலும் பல லட்சங்களைத் தொட்டுவிடும். விவசாயம் சார்ந்து வளர்ந்து வரும் நகரம் என்பதால் பரபரப்பில்லை; என்றாலும் நகரம் கிடுகிடுவென வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
-
- Posts: 121
- Joined: Wed Mar 06, 2013 8:27 am
- Cash on hand: Locked
Re: நண்பர்களே என் ஊர் அறிமுகம்
hai shajumy உங்கள் பதிவைப்படித்தேன்.உங்கள் ஊர் பற்றி செய்திகளைப்படிக்கும் பொழுது நிறைய சந்தோசமாக இருக்கிறது.உங்கள் ஊரைப் பார்க்கவேண்டும் போல் இருக்கிறது. உங்கள் ஊரில் பெரியாண்டிச்சிகோயில் என்று ஒரு சிறப்புமிக்க கோயில் இருக்கிறதாமே?அந்தகோயில் பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா?அந்த கோயிலுக்கு எப்படி போவது?விளக்கம் சொல்கிறீர்களா?படுகையில் நல்ல புதிய பதிவுகள் எழுதுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்?