நண்பர்களே என் ஊர் அறிமுகம்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
shajumy
Posts: 3
Joined: Tue Apr 30, 2013 3:39 pm
Cash on hand: Locked

நண்பர்களே என் ஊர் அறிமுகம்

Post by shajumy » Tue May 07, 2013 4:28 pm

பொள்ளாச்சி இதமாக வீசும் மலைக்காற்று, பழகுவதற்கு இனிய மனிதர்கள், சுவையான குடிநீர், சத்தான இளநீர், நிறைய கல்வி நிலையங்கள், பக்கத்திலேயே இருக்கும் தொழில் நகரமான கோவையில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள், ஆசுவாசப்படுத்திக் கொள்ள அருகருகே இருக்கும் ஆனைமலை, வால்பாறை என பொள்ளாச்சியை பற்றி நிறைய சொல்லலாம். இந்த ஊரை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு எந்த ஊரும் இனிப்பானதாக இருக்காது என்று சொல்கிறார்கள். ஒரே ஒரு நாள் தங்கினாலே போதும், இது நூற்றுக்கு நூறு உண்மை என்பது புரியும். பொள்ளாச்சி சந்தை தமிழகத்தி லேயே மிகப் பிரபலம். காய்கறி முதல் கருவாடு வரை இங்கே விற்காத சமாசாரமே இல்லை. வாரச் சந்தை கூடும் நாட்களில் வியாபாரம் ஒவ்வொரு கடையிலும் பல லட்சங்களைத் தொட்டுவிடும். விவசாயம் சார்ந்து வளர்ந்து வரும் நகரம் என்பதால் பரபரப்பில்லை; என்றாலும் நகரம் கிடுகிடுவென வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
akavitha
Posts: 121
Joined: Wed Mar 06, 2013 8:27 am
Cash on hand: Locked

Re: நண்பர்களே என் ஊர் அறிமுகம்

Post by akavitha » Wed May 08, 2013 12:10 pm

hai shajumy உங்கள் பதி​வைப்படித்​தேன்.உங்கள் ஊர் பற்றி​ செய்திக​ளைப்படிக்கும்​ பொழுது நி​றைய சந்​தோசமாக இருக்கிறது.உங்கள் ஊ​ரைப் பார்க்க​வேண்டும் ​போல் இருக்கிறது. உங்கள் ஊரில் ​பெரியாண்டிச்சி​கோயில் என்று ஒரு சிறப்புமிக்க​ கோயில் இருக்கிறதா​மே?அந்த​கோயில் பற்றி உங்களுக்கு எதாவது​ தெரியுமா?அந்த​ கோயிலுக்கு எப்படி​ போவது?விளக்கம்​ சொல்கிறீர்களா?படு​கையில் நல்ல புதிய பதிவுகள் எழுதுவதற்கு என்னு​டைய வாழ்த்துக்கள்?
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”