மண் வாசனை

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
User avatar
கிருஷ்ணன்
Posts: 1273
Joined: Tue Feb 26, 2013 3:32 pm
Cash on hand: Locked

மண் வாசனை

Post by கிருஷ்ணன் » Thu Mar 07, 2013 7:24 pm

சொந்த மண் வாசனையின் சுகமே தனிதானே ? என் ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கரிசல் மண் வாசம் வீசும் பொட்டலூரணி எனும் அழகிய கிராமம்.எங்கள் ஊர் குளத்துக்கரைதான் எல்லோருக்கும் பிடித்த இடம்.சுற்றிலும் உள்ள ஆலமரங்களும்,அத்தி,வேம்பு,புளிய மரங்களும்தான் எல்லோரையும் வரவேற்கும்.எத்தனை வருடங்கள் கழித்து தாய் மண் திரும்பினாலும் மலரும் நினைவுகளுடன் எங்களை வரவேற்கும்.எங்கள் ஊரில் எண்பது சதவீதம் பேர் இராணுவம்,துணை இராணுவம்,காவல்துறை பணிகளில்தான் அதிகம் பணியாற்றி வருகிறார்கள்.தேசப் பற்று என்று நீங்கள் நினைத்தால் சற்று குறைவான மார்க்தான் உங்களுக்கு.எல்லாம் வேலைவாய்ப்பு பஞ்சம்தான்.மற்றபடி தமிழ் மொழிப் பற்றில் தலையானவர்கள். என்ன எங்கள் ஊரைப் பார்க்க ஆசையாக இருக்கிறதா? "சிங்கம்" படத்தின் கடைசி கிளைமாக்ஸ் ஃபைட்டில் சூர்யாவும்,பிரகாஷ்ராஜ்ம் மோதும் காட்சிகளைப் பாருங்கள்.எல்லாம் எங்கள் ஊரில் எடுத்ததுதான்.என்ன கிளம்பிவிட்டீர்களா?
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: மண் வாசனை

Post by ஆதித்தன் » Thu Mar 07, 2013 9:02 pm

ஊரைப் பற்றி மிக அற்புதமாக சொல்லிவிட்டீர்கள். ... எங்களுக்கும் அந்த சிங்கம் படத்தின் கடைசிக் காட்சிகளை மீண்டும் பார்த்து நினைவுக்கு கொண்டு வரவேண்டும் போல் ஆசையாக இருக்கிறது...

நன்றி.
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”