தாய்மண் பெருமை !

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
veerabagu
Posts: 3
Joined: Sun Dec 30, 2012 9:42 am
Cash on hand: Locked

தாய்மண் பெருமை !

Post by veerabagu » Mon Jan 28, 2013 9:36 pm

விக்கிரமசிங்கபுரம் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். தாமிரபரணி நதி கரையில் அமைந்துள்ள அழகுமிக்க நகராட்சி இது. இந்த ஊர் சிங்கை, பாவநாசம் எனும் சிறப்புப் பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

இவ்வூரின் மக்கள் தொகை சுமார் 60,000 ஆகும். பொதியிகை மலை இவ்வூரின் அருகில் உள்ளது. இவ்வூரின் இன்னொரு சிறப்பாக அகஸ்தியர் அருவி இதன் பக்கத்தில் அமைந்துள்ளது.

எந்த காலத்திலும் இந்த அருவி வற்றாது இருக்கும். இங்குள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்து இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால் தீராத பாவங்கள் கூட தீர்ந்துவிடும் என்பார்கள். இதனால் இந்த ஊரை பாவநாசம் என்றும் அழைப்பதுண்டு. இந்த ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முக்களாநாதர், உலகம்மையுடன் உள்ள சிவாலயம் சிறப்பு பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இது நவ கைலாயம் என அழைக்கப் பெறும் கோயில்களில் முதன்மைக் கோயிலாகும். இத்தலம் சம்பந்தர், அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”