மலையில் அமைந்துள்ள அகத்தியர் கோயில்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

மலையில் அமைந்துள்ள அகத்தியர் கோயில்

Post by ஆதித்தன் » Mon Jan 28, 2013 11:59 am

அகத்தியர் மலைச்சிகரம் அல்லது அகஸ்தியர் கூடம் என்றழைக்கப்படும் இந்த சிகரம் 1868 மீட்டர் உயரத்தை கொண்டுள்ளது. திருவனந்தபுரம் பகுதியில் இதுவே மிக உயர்ந்த மலைச்சிகரமாகும்.
திருவனந்தபுரம் புகைப்படங்கள் - அகஸ்திய மலா சிகரம் - தொலைதூரத் தோற்றம்
Image source:www.wikipedia.org

தாமிரபரணி ஆறு, கரமனா ஆறு மற்றும் நெய்யார் ஆறு போன்றவை இந்த மலையிலிருந்து உற்பத்தியாகின்றன. இது ஹிந்துக்களின் முக்கியமான புனித யாத்திரை ஸ்தலமாகவும் விளங்குகிறது.

இந்த சிகரத்தின் உச்சியில் அகத்தியர் முனிவரின் தத்ரூப சிலையை தரிசிக்கலாம். இப்பகுதி முழுவதும் நிரம்பி வழியும் ரம்மியமான இயற்கைச்சூழல் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்றாகும்.

அகத்தியர் மலைச்சிகரத்தின் உச்சியை மலையேற்றம் செய்துதான் அடையமுடியும் என்பது குறிப்பிட வேண்டிய ஒரு தகவலாகும். அதுமட்டுமல்லாமல் மலையேற்ற செய்வதற்கு வனத்துறையினரின் அனுமதியையும் பெற வேண்டியுள்ளது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும்தான் மலையேற்றத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிகரத்தின் உச்சியிலுள்ள அகத்தியர் கோயிலுக்கு விஜயம் செய்யவும் கேரள அரசாங்கத்தின் அனுமதியை பெறவேண்டும். இச்சிகரத்தை நோக்கி பயணிக்கும் வழியில் பலவிதமான மூலிகைச்செடிகளும் மருந்து தாவரங்களும் வளர்ந்துள்ளதை காணலாம். மேலும், ஏராளமான காட்டுயிர் அம்சங்கள் மற்றும் தாவரங்கள் இம்மலைப்பகுதியில் நிறைந்துள்ளன.
Read in English: Agastya Mala Peak, Thiruvananthapuram
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”