எனது ஊர்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
சுதா
Posts: 69
Joined: Sun Oct 21, 2012 11:25 pm
Cash on hand: Locked

எனது ஊர்

Post by சுதா » Wed Jan 23, 2013 3:10 pm

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.


எனது ஊரைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டுமா? இல்லையென்றாலும் நான் இந்த பயிற்சியினை முடித்துதானே ஆகவேண்டும். அதனால் நான் பிறந்த ஊரைப்பற்றி சொல்ல இருக்கின்றேன்.

நான் பிறந்த ஊர் மிகவும் பிரசித்திபெற்றது. இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நல்லூர் என்ற இடத்தில் பிறந்தேன். யாழ்ப்பாணம் எல்லாவற்றுக்கும் பிரசித்தி பெற்றது என்றாலும் நல்லூர்க்கந்தசாமி கோயில் உலகெங்கும் மிகவும் பிரசித்தி பெற்றது. இன்னுமொரு விடயத்தினால் ஈழம் பிரசித்திபெற்றது. அது தமிழர்கள் எல்லோருக்கும் அல்ல அல்ல தமிழர்கள் என்ன உலக மக்களுக்கே அந்த விடையத்தினைப்பற்றி நன்கு தெரியும். நான் அந்த பக்கம் செல்ல விரும்பவில்லை. ஏனென்றால் அது மிகவும் கரடுமுரடாகவும், மிகவும் துன்பமானதாகவும் இருக்கும்.
முன்பெல்லாம் சுதந்திரமாக இருந்த யாழ்ப்பாணம் தற்போது சில ஆண்டுகளாக திறந்தவெளி சிறைச்சாலைகளாகத்தான் இருக்கின்றது. இப்பொழுது உள்ள யாழ்ப்பாணத்தினைப்பற்றி சொல்வதிலும் பார்க்க முன்னையயாழ்ப்பாணம் மிகவும் அழகானதும், சுதந்திரமானதாகவும் இருந்தது. அங்கு யாழ்ப்பாணத்தின் மிகவும் பழமையான வரலாற்றுச்சின்னங்கள் இருக்கின்றன. ஆனால் தற்போது அந்த வரலாற்று ஆதாரங்களும், தடையங்களும் அழிந்து கொண்டு வருகின்றன அல்ல அல்ல அழிக்கப்பப்பட்டு வருகின்றன.

மன்னிக்கவும் எனது ஊரைப்பற்றி சொன்னாலே சோகமும் துக்கமுமாகத்தான் இருக்கும். இதுமட்டுமல்ல இன்னும்பல.
User avatar
agntvm
Posts: 123
Joined: Tue Mar 27, 2012 8:49 am
Cash on hand: Locked

Re: எனது ஊர்

Post by agntvm » Wed Jan 23, 2013 3:58 pm

வருக வருக :com: :com:
சுதா அவர்களுக்கு நன்றி,
யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் அருமையானது.
இதை நிங்கள் எழுதியதை பார்த்ததும் அதை பார்க்க
வேண்டும் போல் இருந்த்தது.அதையும் நான் பார்தேன்.
நான் மட்டும் பார்தால் போதது நமது படுகை நண்பர்களும்
பார்க்க ஒரு சில இடங்களை இங்கு கொடுத்திருக்கிறோன்.
:thanks: :thanks: :thanks:
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: எனது ஊர்

Post by ஆதித்தன் » Wed Jan 23, 2013 4:47 pm

அழிக்கப்படும் வரலாற்று சின்னங்கள் என்பது மிகவும் வருத்தமான விடயம்.

மீண்டும் சுதந்திரக்காற்று வீசும் காலம் மலரும்.
சுதா
Posts: 69
Joined: Sun Oct 21, 2012 11:25 pm
Cash on hand: Locked

Re: எனது ஊர்

Post by சுதா » Sun Feb 03, 2013 2:56 pm

அட நல்லூரானை இணைக்க மறந்துவிட்டேன். நல்லூரானை இணைத்ததற்கு மிக்க நன்றி agntvm :thanks: :thanks: :thanks:


அத்துடன் உங்கள் நல்வாக்கு மிகவும் சீக்கிரத்தில் பலிக்க இணைவனை வேண்டுகிறோம் ஆதித்தன் :thanks:
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”