Page 1 of 1

ராணியின் கட்டளையை ஏற்று கங்கணம் கட்டி அழையும் மக்கள் தலைவர்கள்

Posted: Mon Nov 21, 2016 8:05 am
by ஆதித்தன்
[youtube]https://www.youtube.com/watch?v=1GQoReR4C3A[/youtube]


இங்கிலாந்து இராணி இங்கிலாந்துக்கு மட்டுமல்ல பல நாடுகளுக்கும் அவர்தான் இராணி. தனது 26-ஆம் வயதில் ராணி கிரீடம் தாங்கிய எலிசபெத் அலெக்சான்றா மேரி, தனது சீரிய பணியினால் ஒவ்வொரு ஆண்டினையும் சிறப்பாகக் கடந்ததோடு, தான் பதவி வகித்து வரும் இங்கிலாந்து பேரரசின் கொள்கையை தன் வாழ்நாளிலேயே, அதாவது உலகம் முழுவதிலுமான நாடுகள் அனைத்தினையும் வென்று தானே உலகின் முதல் ராணி என்ற அந்தஸ்தினை பெறுதல் வேண்டும் என்று அனைத்து தலைவர்களுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். இது, 2010 ஆம் ஆண்டே நிகழ்ந்துவிட்டது என்று நினைக்கிறேன், அல்லது ஆரம்பித்திலிருந்தே அவ்வாறுதான் செயல்பட்டாலும், ராணி தன் முதுமைக்காலத்திற்கு வந்துவிட்டதால் இராணியின் பக்கம் அழுத்தம் அதிகமாக ஆரம்பித்தது 2010 ஆக இருக்கும்.

எனது பார்வையில் பாகிஸ்தான் - இந்தியா போர் என்பது சீனாவினை தன் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான ஒர் ஏற்பாடாகவே தெரிகிறது. ஏனெனில் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்படை கொண்ட நாடுகள் என்றுப் பார்த்தால் சீனா & ரஷ்யா இந்த இரண்டும் தான் ஒர் போட்டியாகவே ராணியின் படைக்கும் இருக்கிறது. இந்த இரண்டையும் முடித்துவிட்டால், அன்று 1947-இல் அகிம்சை போராட்டாம் என்றுச் சொல்லி மக்களைப் பிரிவினை செய்து இந்திய மண்ணின் வீரர்களை எல்லாம் கொன்றுவிட்டு, திட்டப்படி 1947-இல் சுதந்திரம் என்ற ஒர் சட்டப்படி பதவி ஏற்றதும் இராணுவத்தின் மூலம் பல சமஸ்தானங்களையும் ஜமின்களையும் மிரட்டி இந்தியாவுடன் இணைய அடிபணிய வைத்தது போல, இந்த இரண்டு நாடுகளின் படைகளையும் அழித்து கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால், உலகில் உள்ள மற்ற சிறுநாடுகளை எல்லாம் ஒர் சிலமாதங்களில் அடிபணிய வைத்து இராணிக்கு கீழான நாடு என்ற சட்டத்தினை அமுல்படுத்துவிடுவார்கள், பின்னர்..

பூமியின் இராணி, பூமித்தாய் .. உலக நாடுகள் அனைத்திற்குமான ஒரே ராணி என்ற பல பெயர்களுக்கு அவரே சொந்தக்காரி.


இன்றைய நிலையில் இந்தியாவிற்கு போர் அவசியமா? என்று தெரியாது. ஆனால் இராணியின் கட்டளைப்படி செயல்படும் தலைவர்களுக்கு கண்டிப்பாக நடந்தே ஆகவேண்டும். இதுவேதான் பாகிஸ்தான் நிலையும்.

ராணியின் ஆசைக்காக, விரைவில் மூன்றாம் உலகப்போர் வரும் என்று பலர் சொல்வது போல, வந்துவிடும் என்பதில் ஐயமில்லை என்றே எனக்கும் தோன்றுகிறது.