Page 1 of 1

உதித்த மண்ணும், உறங்காத நினைவும்

Posted: Tue Mar 29, 2016 4:12 pm
by jayapriya
அன்பான நணபா்களுக்கு வணக்கம்
நான் பிறந்த ஊா் கோவை மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம்,
எங்களுடைய கிராமம் அழகு மற்றும் ஆரோக்கியமான காற்று சுகாதாரமான சுவையான சிறுவாணி என்னும் அற்புத நீா் கிடைக்கும் ஊா், சுற்றிலும் பல்வேறு வகையான மலா்த் தோட்டம், பேருந்தை விட்டு ஊருக்குள் செல்லும் பாதையில் இரண்டு புறமும்
வேப்பமரம், புலியமரம், அரசமரம் என்று மரங்களாகவே இருக்கும், ஊருக்குள் சென்றவுடன் முன்பு மாாியம்மன் கோவில், இங்குள்ள வீடுகள் அழகாக ஓடு கவிழ்த்து, எப்போதும் சுவாில் வெள்ளை நிறம் மாறாமல் தரை மற்றும் வாசல் முற்றம் முழுவதும் சாணியால் மொழுகப்பட்டு அழகாக கோலமிடப்பட்டிருக்கும், மனிதனைப் போலவே மனிதனால் தன்னோடு வளா்க்கப்பட்ட ஆடு, மாடு, கோழி என்னும் ஜீவராசிகள், உண்ட களைப்பை போக்கிட கோவில் திண்ணையில் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டும். படுத்துக்கொண்டும் இருக்கும் வயோதிகா்கள். வெற்றிலையை குதப்பி பழங்கதை கூறும் பாட்டிகள், தம் கையையே இயந்திரமாக்கி ஆட்டுக்கல், அம்மிக்கல், உரல், சலவைக்கல் அனைத்திலும் தம் இரத்தத்தை உழைப்பாய் கொட்டும் தாய்மாா்கள், அன்னைக்கு உதவிட அழகாய் பழக்கப்படுத்தப்பட்ட தாவணிப் பெண்கள், கோவில் குறிஞ்சி மாடத்தில் கேலி பேசிக்கொண்டும், அரட்டை அடித்துக்கொண்டும் இன்பகமாக இருக்கும் இளைஞா் பட்டாளம், சாலையில் வாகன பயம் ஏதுமின்றி ஆண். பெண் என்ற பேதமின்றி சாதி என்பதையும் என்ன என்று தொியாமல் ஒன்றாய் விளையாடும் சிற்றிலம் சிறார்கள், இன்னும் இன்னும் ஆயிரம் பக்கங்களுக்கு எழுத என்னன்னவோ இருக்கிறது இப்போதைக்கு இது போதும்

Re: உதித்த மண்ணும், உறங்காத நினைவும்

Posted: Tue Mar 29, 2016 7:46 pm
by வெங்கட்
அடடா! தங்களது தமிழ்ப் பிரயோகத்தைப் பாா்த்தால் தோ்ந்த எழுத்தாளா் போல் தோன்றுகிறது. அருமை.