கல்லிடைக்குறிச்சியை சுற்றிப் பார்க்கபோறோம்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

கல்லிடைக்குறிச்சியை சுற்றிப் பார்க்கபோறோம்

Post by muthulakshmi123 » Mon Mar 12, 2012 11:16 pm

வாருங்கள் நண்பர்களே....

திருநெல்வேலி ஜில்லாவில் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ளது நான் பிறந்த எனது ஊரான கல்லிடைக்குறிச்சி..மலையடிவாரத்தில் இருப்பதால் மிகவும் நன்றாக இருக்கும்.பக்கத்தில் மணிமுத்தாறு டேம்...இன்னும் பார்த்தால் போகும் தூரத்தில் பாபநாசம் அதில் அகஸ்தியர் ஃபால்ஸ்...எந்த நேரம் தண்ணி கொட்டிக் கொண்டே இருக்கும்...

கல்லிடையில் கன்னடியன் கால்வாய் உண்டு.அதன் கரையில் வாழ உகந்த அம்மன் கோவில் ..அம்மன் மிகவும் லட்சணமாக அழகாக இருப்பாள்..நாங்கள் தினமும் கால்வாயில் நீந்தி குளித்துவிட்டு அம்மன் சன்னதியை சுற்றி விட்டு வருவோம்..

இங்கு ஸ்ரீவீரப்பபுரம் தெரு என்று இருக்கு..வீதி அகலமாகவும் வீடுகள் எல்லாம் பெரிது பெரிதாகவும் இருக்கும்.அந்த நாள்களில் திருமணமென்றால் இந்த தெருவில் உள்ள வீடுகளில் தான் நடக்கும்... திருமண மண்டபம் எல்லாம் கிடையாது.

கல்லிடையில் பாயும் தாமிரபரணி ஆற்றின் தண்ணீருக்கு ஒரு தனி சுவையே உண்டு...அதிலும் சித்திராபெளர்ணமி அன்றும், பொங்கலுக்கு அடுத்த தினமும் இங்கு ஊரே கூடி கொண்டாட்டமிடும்.. மறக்கமுடியா நினைவுகள்....

கல்லிடையில் அப்பளம் போடும் தொழில் சிறப்பாக நடை பெறும்...சிறுமியாக இருக்கும் போது அப்பளம் போடுவதையும்.ஒரே மாதிரி மிஷின் கட் பண்ணிண மாதிரி இருக்கும்..அப்பளத்தை காய வைக்க அவர்கள் திறந்த வெளியில் வீசுவார்கள்..நிறைய அப்பளத்தை கையில் எடுத்து அதை விசிறி அடிப்பார்கள் ..அப்பளங்கள் எல்லாம் சிதறி ஒன்று போல அழகாக போய் விழும்...கண்கொள்ளா காட்சி..

இங்கு வைராவி டாக்கீஸ், என்ற திரையரங்கு இருந்தது... கூரையின் கீழே மணலில் அமர்ந்து படம் பார்ப்போம். முன்னால் உட்கார்ந்திருப்பவர் மறைப்பார் என்று மணலை குவித்து அதன் மீது உட்கார்ந்து படம் பார்ப்போம்..

இப்போ.. ஏசி தியேட்டரில் அமர்ந்து பார்க்கும் போது கூட அங்கு கிடைத்த நிறைவு கிடைப்பதில்லை...

நண்பர்களே

உங்களுடன் எனது கல்லிடைக்குறிச்சியைப் பற்றியும் அதன் கலையாத ,கலைக்க முடியாத நினைவுகள் பற்றியும் பகிர்ந்து கொண்டதில் எனக்கு பெருமகிழ்ச்சி.......உங்களால் நான் மறுபடியும் சிறு வயது நினைவுகளில் மூழ்கினேன்.....நன்றி...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: கல்லிடைக்குறிச்சியை சுற்றிப் பார்க்கபோறோம்

Post by ஆதித்தன் » Wed Mar 14, 2012 6:22 am

ஆற்றங்கரையில் பிறந்து வளர்வதே ஒர் தனிச் சுகம் தான்.

லெட்சுமியம்மா, எப்படி இவ்ளோ இளமையாக இருக்கிறார்கள் என்பதன் இரகசியம் இங்கதான் இருக்கா..

எங்களோடு பால்ய வயதினை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி, லெட்சுமியம்மா.
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: கல்லிடைக்குறிச்சியை சுற்றிப் பார்க்கபோறோம்

Post by muthulakshmi123 » Wed Mar 14, 2012 10:19 am

Athithan wrote:ஆற்றங்கரையில் பிறந்து வளர்வதே ஒர் தனிச் சுகம் தான்.

லெட்சுமியம்மா, எப்படி இவ்ளோ இளமையாக இருக்கிறார்கள் என்பதன் இரகசியம் இங்கதான் இருக்கா..

எங்களோடு பால்ய வயதினை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி, லெட்சுமியம்மா.
நன்றி ஆதித்தன் சார்...
nadhi
Posts: 201
Joined: Thu Mar 08, 2012 3:12 pm
Cash on hand: Locked

Re: கல்லிடைக்குறிச்சியை சுற்றிப் பார்க்கபோறோம்

Post by nadhi » Thu Mar 15, 2012 12:20 pm

உங்கள் ஊர் ரொம்ப அழகாக இருக்கும் போல் நானும் வந்து பார்க்கனும். அது என்ன?அப்பளம் உடைக்கிறது. திருவிழாவா?. புதியதாய் நல்லாஇருந்திச்சி .பழைய நினைவுகள் என்று அழியாத வண்ணம் கொண்டது. :) :)
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: கல்லிடைக்குறிச்சியை சுற்றிப் பார்க்கபோறோம்

Post by muthulakshmi123 » Thu Mar 15, 2012 2:54 pm

nadhi wrote:உங்கள் ஊர் ரொம்ப அழகாக இருக்கும் போல் நானும் வந்து பார்க்கனும். அது என்ன?அப்பளம் உடைக்கிறது. திருவிழாவா?. புதியதாய் நல்லாஇருந்திச்சி .பழைய நினைவுகள் என்று அழியாத வண்ணம் கொண்டது. :) :)

அப்பளம் உடைக்கிறது இல்லை நதியா...அப்பளம் தயாரிக்கும் தொழில்..அரிசி,உளுந்தது மாவில் தயார் செய்து பலகையில் வட்ட வட்டமாக போட்டு வெயிலில் காய வைப்பார்கள்..அப்போ அவர்கள் அப்பளத்தை காய வைக்க வீசுவார்கள் என்றேன்,.
umajana1950
Posts: 561
Joined: Tue Mar 06, 2012 8:33 am
Cash on hand: Locked

Re: கல்லிடைக்குறிச்சியை சுற்றிப் பார்க்கபோறோம்

Post by umajana1950 » Thu Mar 15, 2012 4:30 pm

கூரையின் கீழே மணலில் அமர்ந்து படம் பார்ப்போம். முன்னால் உட்கார்ந்திருப்பவர் மறைப்பார் என்று மணலை குவித்து அதன் மீது உட்கார்ந்து படம் பார்ப்போம்..
இந்த சுகம் எல்லாம் இனி வரும் சமுதாயத்துக்கு எங்கே கிடைக்கப் போகிறது!
muthulakshmi123
Posts: 1266
Joined: Thu Mar 08, 2012 2:36 pm
Cash on hand: Locked

Re: கல்லிடைக்குறிச்சியை சுற்றிப் பார்க்கபோறோம்

Post by muthulakshmi123 » Thu Mar 15, 2012 7:52 pm

umajana1950 wrote:
கூரையின் கீழே மணலில் அமர்ந்து படம் பார்ப்போம். முன்னால் உட்கார்ந்திருப்பவர் மறைப்பார் என்று மணலை குவித்து அதன் மீது உட்கார்ந்து படம் பார்ப்போம்..
இந்த சுகம் எல்லாம் இனி வரும் சமுதாயத்துக்கு எங்கே கிடைக்கப் போகிறது!
இது போல் படித்து பார்த்து ஆறுதல் அடைய வேண்டியது தான்
RJanaki
Posts: 138
Joined: Wed Mar 07, 2012 5:11 pm
Cash on hand: Locked

Re: கல்லிடைக்குறிச்சியை சுற்றிப் பார்க்கபோறோம்

Post by RJanaki » Fri Mar 23, 2012 4:45 pm

சிறு வயது நினைவுகள் என்றும் மறக்கமுடியாத பொக்கிஷங்கள்.
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”