Page 1 of 1

பிறந்த ஊர் பெருமை

Posted: Wed Nov 05, 2014 4:45 pm
by s. anusuya
கண்டிப்பாக பார்க்க வேண்டியவை

வேலூர் நகரத்தின் அடையாளமான வேலூர் கோட்டை வேலூர் நகரத்தின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ளது. பழைய பேருந்து நிலையத்திற்கு எதிரிலேயே இந்த வரலாற்றுச்சின்னம் பெருமையுடன் வீற்றிருக்கிறது.

இந்திய தொல்லியல் துறையில் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தில் கீழ் இந்த கோட்டை பாதுகாக்கப்படுகிறது. ஜலகண்டேஷ்வரர் கோயில், ஒரு மசூதி, ஒரு தேவாலயம், முத்து மண்டபம், புகழ் பெற்ற வேலூர் கிறிஸ்டியன் மருத்துவமனை மற்றும் மாநில அரசு அருங்காட்சியகம் போன்றவை இந்த கோட்டை வளாகத்தில் இடம் பெற்றுள்ளன.

இந்த கோட்டையின் வெளிச்சுவரானது பிரம்மாண்ட கிரானைட் பாறை கட்டமைக்கப்பட்டிருப்பதோடு அதனை ஒட்டியே அகலமான அகழி ஒன்றும் காணப்படுகிறது. சூர்யகுண்டம் நீர்த்தேக்கத்திலிருந்து இந்த அகழிக்கு நீர் கொண்டு வரப்படுகிறது.
திப்பு மஹால் எனும் பிரசித்தமான அரண்மனை இந்த கோட்டைக்குள் அமைந்துள்ளது. திப்பு சுல்தான் மன்னர் தனது குடும்பத்தாருடன் இந்த அரண்மனையில் வசித்ததாக சொல்லப்படுகிறது.

ஆங்கிலேயர் ஆட்சியில் பல ராஜவம்ச அரசியல் கைதிகளை இந்த அரண்மனையில் அடைத்து வைத்திருந்துள்ளனர். கண்டி மன்னர், விக்கிரம ராஜசிங்கர் மற்றும் திப்பு சுல்தான் குடும்பத்தினர் ஆகியோர் இங்கு அடைக்கப்பட்டிருந்துள்ளனர்.
சிப்பாய் கலகம் எனும் முதல் இந்திய சுதந்திர போராட்ட எழுச்சி இந்த வேலூர் கோட்டையில்தான் நிகழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். எனவே தேசிய வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த சுற்றுலா அம்சமாக இந்த வேலூர் கோட்டை வீற்றிருக்கிறது.