நான் பிறந்த ஊர் புண்ணிய பூமி

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
svindraa
Posts: 2
Joined: Wed May 21, 2014 1:47 am
Cash on hand: Locked

நான் பிறந்த ஊர் புண்ணிய பூமி

Post by svindraa » Tue Jul 15, 2014 8:54 am

நான் பிறந்த ஊரை புண்ணிய பூமி என கூரியதை மிகை படுத்தி கூறுவதாக எண்ண வேண்டாம். அப்படி கூறுவதற்கு முக்கிய காரணம் உள்ளது.

எனது ஊர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த திருப்பூவனம் எனும் நகரம். இங்கு வைகை ஆறு ஓடுகிறது ஆனால் தற்போது நீரை தான் கான முடியவில்லை. ஆற்றங்கரை ஓரத்தில் அழகிமீனால் கோவில் உள்ளது. அந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். இங்கு இறந்தவர்களுக்கு 30 நாள் கழித்து விளக்கு போட்டால் இறந்தவர்கள் மோச்சம் அடைவார்கள் என்பது ஐதீகம். மேலும் ஆற்றங்கரையில் திதி கொடுத்தால் இராமேஸ்வரத்தில் திதி கொடுப்பதற்கான புண்ணியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம். இப்போது நான் எனது ஊரை புண்ணியபூமி என கூறியது சரிதானே.

மேலும் சுற்றியுள்ள ஏனாதி, அல்லிநகரம், வயல்ச்சேரி, லாடனேய்ந்தல், மடப்புரம், அதிகரை, பழயனூர் போன்ற இன்னும் பல கிராமங்களுக்கு திருப்பூவனம்தான் டவுன். இங்கு வாரம் செவ்வாய் கிழமை தோறும் ஆடு, மாடு, கோழி மற்றும் காய்கறி சந்தை நடைபெறும், இதில் சுற்று கிராமங்களில் பயிறிடப்படும் காய், கனிகள் தூய்மையாகவும் மலிவாகவும் விற்கபடும். மேலும் ஊரின் உள்ளே பெரிய கோவில் மற்றும் மாரியம்மன் கோவிலும் உள்ளது. இந்த மாரியம்மன் கோவிலில் வருடந்தோறும் மாசி மாதத்தில் அக்கினி சட்டி எடுக்கும் விழா வெகு விமர்ச்சயக நடைபெறும்.வைகை ஆற்றின் மறு கரையில் மிகவும் சக்திவாய்ந்த மடப்புரம் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினந்தோறும் அன்னதானம் நடைபெருகிறது. இவ்வாரான சிறப்புகளைகொண்டதுதான் நான் பிறந்த புண்ணிய பூமி.
efgroups
Posts: 270
Joined: Sat May 18, 2013 1:25 pm
Cash on hand: Locked

Re: நான் பிறந்த ஊர் புண்ணிய பூமி

Post by efgroups » Tue Jul 15, 2014 9:06 am

:great: welcome :ros:
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”