About My Native

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
akalagesan
Posts: 3
Joined: Mon Sep 10, 2012 10:41 am
Cash on hand: Locked

About My Native

Post by akalagesan » Mon Sep 10, 2012 11:42 am

எனக்கு மதுரையில் நகர வாழ்க்கை அமையவில்லை. கிராம வாழ்க்கைதான் என்றாலும் நகரத்தை ஒட்டிய கிராம வாழ்க்கையாக அமைந்தது.
மதுரை பக்கம் பிறந்தவர்கள் அதிகம் காண விரும்புவது சித்திரை மாத திருவிழா வினைத்தான். மதுரையிலும் அதனை தொட்டடுத்து உள்ள விருதுநகர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்ட மக்கள் கூட கொடுத்து வைத்தவர்கள் தான் இந்த்த சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்குவதை காண.
அழகர் ஆற்றில் இறங்குவதை காண மதுரைக்கு பக்கத்து கிராமங்களில் இருந்து மாட்டுவண்டி கட்டிக்கொண்டு குடும்பத்துடனும் உறவினர்கள் உடன் சாப்பாடு கட்டிக்கொண்டு வருவார்கள்.
மேலும் நாங்கள் சிறுவயதில் ஜல்லிக்கட்டு பார்ப்பதற்கு அலங்காநல்லூர், சத்திரப்பட்டி மற்றும் பக்கத்து ஊர்களில் நடக்கும் காளை அடக்கும் போட்டியை காண குடும்பத்தினருடன் செல்வோம். அந்த காளை களை பார்பதற்கே பயமாக இருக்கும். நாங்கள் கூட அந்த காளை களை தூரத்தில் இருந்து தான் பார்ப்போம்.
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”