எங்க ஊரு

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
aruna xl
Posts: 4
Joined: Thu May 15, 2014 1:25 pm
Cash on hand: Locked

எங்க ஊரு

Post by aruna xl » Sun Jun 01, 2014 7:54 pm

சொர்க்கமே என்றாலும் அது னம் ஊரு போல வருமா?
ஆமாங்க ... எங்க ஊரு கூட அப்படித்தான் எனக்கு...
இராமனாதபுரம் மாவட்டம் கமுதி தான் என் சொந்த ஊரு...
குலுகுலு காற்றும், மலை வீழ் அருவிகளும், நீர் நிறை குளங்களும்.....
இதெல்லாம் இருக்க வேண்டும் என்று ஆசைதான்.... ஆனால் இது எதுவுமே எங்க ஊர்ல இல்ல. காய்ந்த குளங்கள் .... வறண்ட பூமி....
தண்ணீர் பஞ்சம் ..... காலி குளங்களுடன் காத்திருக்கும் மகளிர்... தண்ணீர் பிடிக்க நடக்கும் சண்டையை விலக்க ஒரு கூட்டம் .... அதை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம்.... கல்வி அறிவு குறைவே. இது ஒரு காலம்.
ஆனால் இன்று .....
கல்வியறிவில் அளப்பெரும் வளர்ச்சி....பேரூராட்சி அளவிற்கு வளர்ந்துவிட்ட எங்க ஊர பார்க்கும்போது மனதில் பெரும் மகிழ்ச்சி...
எங்க ஊரு சிறப்பு என்று சொன்னால் 150 ஆண்டு பழமை வாய்ந்த கிறித்தவ ஆலயம், வீர பாண்டிய கட்டபொம்மன் ஒளிந்திருந்த கோட்டை, மாரியம்மன் கோவில், 4கி.மீ. தொலைவில் உள்ள முத்துராமலிங்கனார் பிறந்த சிறப்பு மிகு பசும்பொன் . இத்தனை சிற்ப்புகளையும் உள்ளடக்கி எங்க ஊரு நல்ல ஊரு தான்...
User avatar
ஆதித்தன்
Site Admin
Posts: 12146
Joined: Sun Mar 04, 2012 1:17 am
Cash on hand: Locked

Re: எங்க ஊரு

Post by ஆதித்தன் » Sun Jun 01, 2014 10:25 pm

aruna xl wrote: குலுகுலு காற்றும், மலை வீழ் அருவிகளும், நீர் நிறை குளங்களும்.....
இதெல்லாம் இருக்க வேண்டும் என்று ஆசைதான்.... ஆனால் இது எதுவுமே எங்க ஊர்ல இல்ல.
:isir: :isir: :isir: :isir:

நான் கூட முதலில், நாமும் இப்படியான குலுகுலு காற்று வீசும் அருவிக்கரையான உங்க ஊர்க்கு சிப்ட்டாகிடலாம்னு நினைச்சேன் ... ஆனால் ... :isir: :isir: :isir: :isir:
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”