நான் ஆடிய தொட்டில்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
User avatar
kannan77
Posts: 34
Joined: Thu Mar 06, 2014 4:00 pm
Cash on hand: Locked

நான் ஆடிய தொட்டில்

Post by kannan77 » Tue Mar 18, 2014 4:30 pm

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .நான் பிறந்த ஊர் கடையநல்லூர். விவசாயம் பிரதான தொழிலாய் இருந்தது ஒரு காலத்தில்.ஏராளமான தென்னந்தோப்புகளும் பசுமையான வயல்களும் சூழ்ந்த அழகிய நகரம்தான் .ஆனாலும்கூட நாகரீக வளர்ச்சியின் காரணமாக எல்லாமே மாறிப்போய்விட்டது.இயந்திர வாழ்க்கை பழகி விட்டது அந்த அழகிய வயல்களும் தோப்புகளும் ரியல் எஸ்டேட் தொழிலின் காரணமாய் வீடுகளாய் மாறிப்போனது.குற்றாலம் மிக அருகில் என்பதால் ஒவ்வொரு சீசனிலும் தென்றலும் சாரலும் சேர்ந்து வந்து தலை நனைக்கும்.இன்று அந்த ஆனந்தம் இல்லை.அட்டககுளம் எங்களின் ஈடன் கார்டன்.விடுமுறை நாட்களில் கிரிக்கட் கிரவுண்ட்.விவசாயத்திற்கும் தாகம் தீர்ககும் அமுத சுரபியாய் கருப்பாநதி நீர்த்தேக்கம்.
User avatar
kannan77
Posts: 34
Joined: Thu Mar 06, 2014 4:00 pm
Cash on hand: Locked

Re: நான் ஆடிய தொட்டில்

Post by kannan77 » Tue Mar 18, 2014 4:34 pm

நடை பழகும் குழந்தை நான்.ஆதித்தன் சாரின் கரங்களை பிடித்து விரைவில் ஓடவும் கற்றுக்கொள்ள ஆசை.
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”