நான் பிறந்த ஊர்

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
sabura
Posts: 6
Joined: Wed Feb 26, 2014 9:33 pm
Cash on hand: Locked

நான் பிறந்த ஊர்

Post by sabura » Sat Mar 01, 2014 12:47 am

நான் பிற்ந்த ஊர் தஞ்சாவூர். தமிழ் நாட்டின் நெற்கழஞ்சியம் தஞ்சாவூர். தலையாட்டி பொம்மை இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது. சோழ நாட்டின் தலை நகரம் தஞ்சை. இங்கு சோழ ராஜ்ஜியதின் அரன்மனை உள்ளது. கோவில்களில் பெரியது தஞ்சை பெரிய கோவில். இங்கு உள்ள நந்தி அனைவரும் அறிவர். தமிழ் மனம் கமழும் தஞ்சை தரணி. இங்கு பூங்கா, மணிமண்டபம் உள்ளது.
இங்கே உள்ள கிராமங்களில் இயற்கை எழில் கொஞ்சும். இங்கு அதிகமன நெல் உற்பத்தி இருப்பதால் தான் தஞ்சை நெற்கழஞ்சியமாக திகழ்கிறது. தஞ்சையில் பருத்தி உற்பத்தி உள்ளது. தஞ்சை ஓவியம், தஞ்சை தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் தட்டு வெளினாட்டவர் கூட விரும்பி வாங்கி செல்லும் பொருட்கள் ஆகும். சோழ நாட்டின் பெருமை தஞ்சை நகரம்.
தஞ்சை நஞ்சை புஞ்சை நிரம்பி வழியும் இயற்கை நகரம் ஆகும் :great: :ro:
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”