காதல் கமழும் கல்வை!!!

நமது ஊர் மற்றும் நாம் சுற்றித் திரிந்த ஊரைப் பற்றி பேசலாம் வாங்க.
Post Reply
PONN.SIVA
Posts: 12
Joined: Fri Jan 03, 2014 2:02 pm
Cash on hand: Locked

காதல் கமழும் கல்வை!!!

Post by PONN.SIVA » Fri Jan 24, 2014 8:32 pm

கடல் மாதா ஒரு புறமும்
மலை மாதா மறுபுறமும்
அரண் அமைத்து அரசாளும்
குமரி தாயின் ஒரு பிள்ளை -
கல்வை!! எங்கள் உயர் கல்வை!!
{ குமரி -கன்னியாகுமரி மாவட்டம். கல்வை-கல்லுகட்டி}
தென்னை மரங்கள் புடைசூழ
தென்றல் வந்து விளையாட
அன்னை மடியில் பூஞ்சோலை
ஆயிரம் வண்டினம் இசைபாடும்-
கல்வை!! எங்கள் உயர் கல்வை!!
{வயல்வெளிகளையும் அவற்றை சுற்றிலும்
தென்னை மர தோப்புகளையும் கொண்டது எமது கல்வை }
ஆலங்கால் என்னும் கங்கை நதி
புத்தன்கால் என்னும் காவிரியும்
பாதங்கள் தன்னை வருடிடவே
பத்தினி வடிவாய் வாழ்கின்ற-
கல்வை!! எங்கள் உயர் கல்வை!!
{ஆலங்கால்-மேற்கு திசையில் ஓடும் ஓடை
புத்தன்கால் -கிழக்கு திசையில் ஓடும் ஓடை}
சக்தியின் வடிவாம் கல்வை இவள்!!
சக்திவிநாயகர் செல்ல மகள்!!
எத்திசை நோக்கினும் வளமை இவள்!!
இயற்கை அன்னையின் இளைய மகள் -
வாழிய! வாழிய! வாழியவே!!
எங்கள் கல்வை வாழியவே!!!.
....என்றும் உங்கள் "கல்வை சிவா"....
Post Reply

Return to “ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்!”